பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 சொற்றொடர்களே நிரம்பியுள்ளன. அத்தகைய சிறு சொற்றொடர்களைச் செம்மையாகப் படைப்பதில் திரு.வி.க. அவர்களை விஞ்சுவார் எவருமிலர் என்று நாம் துணிந்து கூறலாம் அதற்கு ஒர் எடுத்துக் காட்டு வருமாறு:

     "போர் இருவகை. ஒன்று 
 அறப்போர்; மற்றொன்று 
 மறப்போர். அறப்போர் 
 தன்னலமற்றது; மற்றையது 
 தன்னலமுடையது. தன்ன லமற்ற, 
 உயிர்வதையற்ற அறப்போர் 
 கொலையாகாது. மற்றப்போர் 
 கொலையின் பாற்படும். விளக்கம் 
 பகவத்கீதையிலும் திருக்குறளிலும் 
 பார்க்க".
      மாத்யூ அர்னால்டு (Mathew Arnold) என்னும் மேலைநாட்டு அறிஞர் உரை நடைக்குத் தெளிவும், சுருக்கமும், இனிமையும் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இத்தனை பண்புகளும் மேலே தரப்பட்டுள்ள உரைப் பகுதி யிலே செறிந்துள்ளமையினை நாம் நன்கு காணலாம்.
  "சொல்லுக சொல்லைப் பிறிதோர் 
   சொல் அச் சொல்லை
   வெல்லுஞ்சொல் இன்மை 
   அறிந்து’’

என்பது பொய்யில் புலவர்தம் பொன் மொழியாகும். ஒத்த சொல்லும், மிக்க சொல்லும் உளவாகாமல் தக்க சொல் அவ ஒருவன் எடுத்தாள வேண்டும் என்பது இப்பொன் மொழி யின் பொருளாகும். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்ட , மேற்கூறிய உரைநடைப்பகுதி விளங்குகிற தன்றோர். அந் நடையிலே நடை அழகினைக் காண்கிறோம். சொற் சுருக்கத்தினைப் பார்க்கின்ருேம். தெளிவும் இனிமையும் போட்டி யிடுகின்றன.

   வேறு சில சொற்றொடர்களிலே எழுவாய் ஒன்றுதான் இருக்கும் பயனிலைகளோ பல இருக்கும். அதற்கோர் எடுத்துகாட்டு வருமாறு :