பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 வரலாறே பேசப்படுகிறது. வேறு ஒன்றும் பேசப்படவில்லை அங்கு ஆசிரியர் நமக்கு அறிவிப்பதெல்லாம் இந்திய வரலாறே. என்றாலும் பிறர் எழுதிய இந்திய வரலாற்றுக் கும், திரு. வி. க. அவர்கள் எழுதிய இந்திய வரலாற்றுக்கும் வேற்றுமை இருக்கத்தான் செய்கிறது. அந்த வேற்றுமைக் குக் காரணம் என்ன ? அதற்குக் காரணம் அவரது நடை தான்-பேச்சு நடைதான். பிற இந்திய வரலாற்று நூல் களுக்கும், இந்நூலுக்கும் உரிய பொருள்-கருத்துக்கள் ஒன்றே (Common Objects).நிகழ்ச்சிகளைக் கூறுவதோடு நிறுத்தாமல், ஆங்காங்கே தம்முடைய கருத்துக்களையும் கூறுகிறார், அவர் கூறும் கருத்துக்களுக்கு அரண்போல் வரலாற்று நிகழ்ச்சிகள் அமைகின்றன. அதனால் நூலின் நடை வேறுபடுகின்றது. அதற்கோர் எடுத்துக்காட்டு வருமாறு : - அவுரங்கசீப்பை எதிர்த்துப் போராடியவர் சிலர். அவருள் சிறந்தவர் சிவாசி. அவுரங்கசீபின் மனத்தில் முசுலீம் உலகே நின்றது; சிவாசி மனத்தில் இந்து உலகே நின்றது; இருவர் மனத்திலும் இந்தியா என்னும் தாய்நாடு நிற்கவில்லை. தமது பிணக்கால் அயலவர் நாட்டிற் பெருகி, முடிவில் சுய ஆட்சியை வீழ்த்தும் என்பதை இருவரும் உணர்ந்தாரிலர். அவர்தம் உணர்வை மதவெறி விழுங்கி விட்டது. சுதேசிய ஆட்சி யின் வீழ்ச்சிக்குக் காரணம் அவுரங்கசீபு மட்டுமல்லர்: சிவாசியும் ஆவார்; உள்ளூர்ப் பிணக்கு வெளியூரை அழைத்தல் இயல்பன்றோ.” மற்றொரு வகை உரை நடை அறிவிப்பு நடையாகும். (Informative Prose). இவ்வறிவிப்பு நடையில் நடைச்சிறப்பு ஒன்றும் தேவையில்லை என்றும், இருக்கவும் செய்யாது என்றும் மேலைநாட்டார் கூறுவர். ஆனால் அக்கூற்று திரு. வி. க. அவர்களைப் பொருத்தவரை முற்றிலும் பொருந்தாது. இல்