பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 45 தன்னளவில் முடிந்து நின்று இனிமை பயக்கின்றது. என்ன அழகு என்ன அருமை! என்ன தெளிவு! தம் கருத்துக்களை, உணர்ச்சிகளை, தெளிவாகவும், இனிமையாகவும், திட்டவட்டமாகவும், படிப்போர் இடர்ப்படாது இருப்பதற்கு எளிமையாகவும் கூறுவதற்கேற்ற நிலையில் திரு. வி. க. அவர் _ பத்தி அமைப்பினைக் கையாண்டிருப்பது வியத்தற்குரியது. ஆகும். இதுகாறும் கூறியவற்றால், திரு. வி. க. அவர்கள் தமக்கு ஒரு தமிழ் நடையினை வகுத்துக் கொண்டவர் காண்பதும், அவ்வாறு வகுத்துக் கொண்ட நடையிலே பேச்சு உரை நடைக்குச் சிறந்ததோர் இடத்தை அளித்து, தமிழ் உரை நடையினை உலகம் போற்றும் வண்ணம் உயர்த்தியவர் என்பதும், அவர்தம் உரை நடையிலே பத்திப் பகுப்பும், தெளிவும், இனிமையும், சுருக்கமும், விளக்கமும் செம்மை அமைந்துள்ளன என்பதும், பலவகை உரை நடைகள் அவர்தம் தமிழ் உரைநடையிலே பின்னிக் கிடக்கின்றன என்பதும், அது காரணமாக அவரது உரைநடை மின்னிச் சுடர் விடுகின்றது என்பதும், அத்துடன் அவர்தம் உரைநடையினை நாம் படிக்குங்கால் - உரத்துப் படிக் குங்கால் தமிழ் தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப் பெரியார், திரு.வி.க., அவர்களே நேரில் வந்து முழங்குவது போன்ற உணர்வைப் பெறுகிறோம் என்பதும் இனிது பெறப்படும். இன்று தமிழ் அறிஞர் பலர், இளைஞர்கள் அவரது நடையைப் பின் பற்றி தங்கள் உரைநடைப் புலமையை வளர்த்துக் கொண்டனர் என்று நாம் துணிந்து கூறலாம். எனினும், திரு.வி.க. அவர்களது உரைநடை போல முன்னும் தோன்றியது.இல்லை இன்றும் தோன்றவில்லை; பின்னும் தோன்றுதல் அருமை. எனவே, தமிழ் உரைநடை வரலாற்றிலே திரு. வி.க. அவர்களுக்கு சீரிய, நேரிய ஓர் இடம் உண்டு என்பதில் ஐயமில்லை