பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49 இவ்வாறு செய்யுட் கோவைகளையும் கூட அவ்வாறு அவர்கள் குறித்தார். பின்னர் பரந்து கிடக்கும் இலக்கிய வகையை மாத்பிரம் அச்சொல் குறித்தது. இதனை மகா காவியம் என்றும், பெருங் காவியம் என்றும் சொல்வர். மேனாட்டாரும் பரந்து கிடக்கும் பாட்டு வகையை எபிக் (Epic) என்றனர். கிரேக்க மொழியில் ஒமர் செய்த மியட்', 'ஒடிசி என்பவற்றை முன்மாதிரியாகக் கொண்டு காப்பியங்களை அளவிட்டனர். அரிஸ்டாட்டிலும் இதை ஒட்டியே பின்வருமாறு காப்பிய இலக்கணம் வகுத் துள்ளார். காப்பியத்தில் சிறந்த ஒரு பொருள் கதையாக அமைதல் வேண்டும். அது, முதல் இடை கடை நிலைகளை யுடையதாய் இருக்க வேண்டும். உறுப்பினர்களைப் பெருமை யுடையவர்களாய் அமைத்தல் வேண்டும். கதை அமைப்பிலும் சொல்வதிலும் முன்பின் மாறுபாடு இருத்தல் கூடாது. வேறுபாடுடைய உண்மைகளைச் சொல்ல வேண்டும்.' அப்பெருங்காப்பியங்கள் இனி தமிழ்க் காப்பியங்களைப்பற்றிக் கூறுவனவாம் கற்றுத் துறைபோய அறிஞர்களால் ஐம்பெருங்காப்பியங்கள் என கூறப்பட்டவை சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி என்பனவாகும் இவ்வைந்து நூல்களையும் ஒருசேரவைத்து ஐம்பெருங் காப்பியங்கள் என்று வழங்கும் வழக்கு எப்பொழுது தமிழ் நாட்டில் ஏற்பட்டதென்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. சிலப்பதிகாரம் 'நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்' ஐம்பெருங்காப்பியங்களே காலத்தால் முந்தியது. இக்காப்பியம் , சோழ நாட்டிற் பிறந்து, பாண்டிய நாட்டிற்