பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 59


எனச் சிறந்ததொரு உவமையைக் கையாண்டு அருமையாக அதனை வருணித்துள்ளார்.

   இலக்கியம் அழகினை வடித்துக் காட்ட வேண்டும் என்பது பலரது கருத்தாகும். அதற்குத் துணை புரிபவை சுருங்கச் சொல்லல் (Conciseness of Expression), நவின்றோருக்கினிமை, நன்மொழி 

புணர்த்தல் (Felicity of Expression), ஆழமுடைத்தாதல் (Pregnany of Ideas) முதலிய பத்து அழகுகளாகும். சிறப்பாகச் செறிவுடைமை, வண்ணம் (Rhythm), எளிமை, ஒலிநயம் (Euphony) ஆகியவற்றையும் கூறலாம். இவற்றுள் வண்ணம் என்பது இருபது வகைப்படும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். பெரெட் யெங் (Brett Young) என்பவர் " வண்ணம் என்பது விளக்கப்படுவது அல்ல ; உணரப் படுவதே" என்று சொல்வி உள்ளார். ஒலி நயம் செவிக்கு இனிமையைக் கொடுக்கும். அதற்கு ஓர் உதாரணம் காட்டுவாம். பித்தன் ஒருவனைப் பற்றி மணிமேகலை ஆசிரியர் நய மாகப் பாடியுள்ளார். அது வருமாறு :

   "அமூஉம் விழுஉ மரற்றுங் கூஉம் 
   தொழுஉ மெழுஉஞ் சுழலலுஞ் 
   சுழலும் ஒடலு மோடு மொருசிறை 
   யொதுங்கி நீடலு நீடு நிழலொடு 
                         மறலு !"
   இதை வாய்விட்டு ஒருமுறை படியுங்கள். ஒலி இன்பத்தைக் கேட்டு மகிழலாம்.
   மேலும் மணிமேகலை ஆசிரியரது நடை எளிய, இனிய, தெளிய நடையாய் உள்ளது. எவ்வித இடர்ப்பாடு மின்றி கற்போர்க்கு எளிதாக இதன் நடை அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக,
   "சுதமதி யொளித்தாய் துயரஞ் 
                        செய்தனை 
   தனவோ கனவோ வென்பதை 
                         யறியேன் 
   மனநடுக் குறுாஉ மாற்றந் தாராய்”