பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 52


என்று பெளத்த சமயக் கொள்கை அந் நூலில் நன்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. படிக்கவும் சுவைக்கவும் நயனும் பயனும் அளிக்கும் இக்காப்பியத்தின் சிறப்பை கற்பனைக் களஞ்சியமாகிய சிவப்பிரகாசர்,

   "சமந்தா கினியனி வேனிப் 
          பிரான்வேங்கை மன்னவ நீ 

கொந்தார் குழன்மணி மேகலை

                         நூனுட்பம்"

என்று போற்றியுள்ளார்.


சிந்தாமணி

   இஃது ஒரு சமணசமயக் காப்பியம். செந்தமிழ் மொழியிற் சிறந்து விளங்கும் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாக விளங்கும் இது, பழைய உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டுள்ள சிறந்த நூல்களுள் ஒன்று. வடமொழி வான்மீகி இராமாயணம் போல் எல்லா வருணனைகளும் இதன்பால் அமையப் பெற்றிருப்பதாலும், பிற்காலத்தில் தோன்றிய தமிழ்க் காப்பியங்கள் பலவற்றிற்கும் வழிகாட்டியாய் விளங்குவதாலும் இதனை அறிஞர்கள் பெருங்காப்பியம் எனக் கொண்டனர்.

சிந்தித்த பொருள்களை அளிக்க வல்லதும் வானுலகத்தில் உள்ளதுமாகிய சிந்தாமணிபோல சைனர் வேண்டிய பொருள்களே வேண்டியாங்கு இந்நூலால் பெறுவர் என்பதனால் இந்நூல் இப்பெயர் பெற்றது. இந்நூல் ஏமாங்கத நாட்டு மன்னனாகிய சீவகனது பிறப்பு முதல் வீடு பேறு இறுதியாகவுள்ள முழு வரலாற்றைக் கூறுகிறது. இதற்கு மணநூல் என்றொரு பெயருண்டு. 3145 செய்யுட்களைக் கொண்ட இப்பெரு நூல் நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈருகப் பதின்மூன்று பிரிவுகளையுடையது. இவற்றுள் 3, 4, 5, 6, 7, 8, 9, 12 ஆகிய இலம்பகங்களில் சீவகன் காந்தருவதத்தை, குணமாலை, பதுமை