பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 செஞ்சொற் கவிதைகளாலாய சிந்தாமணியில் தமிழின் சென் சுவை அனைத்தையும் காணலாம். கவியரசராகிய கம்பர் செவிக்கினிய சிந்தாமணிச் சொற்களை அப்படியே பெயர்க்க எடுத்தமைத்தும் , அந்நூலில் காணும் அழகுச் சித்திரங்களைச் சிதையாது எழுதியமைத்தும் தமது காவியத்தை எழுதியிருப்ப தொன்றே இந்நூலின் சிறப்பை நமக்கு நன்கு எடுத்துக் காட்டுகின்றது. சுருங்கக் கூறின் கம்ப இராமயணத்திற்கும், பெரிய புராணத்திற்கும் வித்து மணியிலேதான் உள்ளது. விருத்தப்பாவிற்கு வித்தூன்றிய வித்தகர் திருத்தக்கத் தேவர் ஆவார். உரையாசிரியர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட நூல் சிந்தாமணி. விருத்தப்பாவால் தொடர்நிலைச் செய்யுளாக முதன் முதல் பெருங்காவிய மியற்றிய பெருமை திருத்தக்கதேவரையே சாரும். தனக்கு முன்னர் தோன்றிய நூல்களைத் தன்னகத்தே கொண்டு பின்வந்த நூல்களின் கருவாய் விளங்கும் இப்பெருங் காவியத்தைப் பாடிய தேவரை தமிழிலக்கிய வர லாற்றில் காவிய காலத்திற்கு கால்கோள் விழாச் செய்த கவிஞர் எனக் கொள்ளவேண்டும். பண்டைப் பாவலர்தம் பளிங்கு நடைபயின்று ஒளிரும் வெண் பொன் ஒழுக்கும், திண்மையும் துண்மையும் செறிந்த சிந்தாமணியின் நடை பளிங்குத் தரையிற் செல்லும் போல ஒழுகிச் செல்கிறது. நாட்டு வருணனை, நகர் வருணனை, கடல் வருணனை, மலை வருணனை, முதலிய வருணனைகள் வித்தகர் திருத்தக்கதேவரின் கவிதையின் ஆழத்தையும் கற்பனையின் செறிவையும், தமிழ் நூலார் புலமையையும், தமிழின் நீர்மையையும் நமக்குத் தெற் றெனக் காட்டுகின்றன: செல்வர் மனத்தினோங்கித் திருவின் மாந்தர் நெஞ்சி னெல்லை யிருளிற்ருகிப் பூந்தா திணிதி ளொழுகிக்