பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65 கொல்லு மரவின் மயங்கிச் சிறியார் கொண்ட தொடர்பிற் செல்லச் செல்ல வஃகு நெறிசேர் சிலம்பு சேர்ந்தான் _ என்னும் கவிதை தேவரின் கவிவனை, கைவனை முதிர்ச்சிக்கு ஒர் எடுத்துக்காட்டாகும். வளையாபதி இந்நூல் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகக் கூறப்படுகின்றது. இது குண்டலகேசியைப் போன்றே (முற்றிலும் கிடைத்திலது. உரைகளில் மேற்கோளாகக் காட்டப்பட்ட சில பாடல்களைப் புறத்திரட்டில் காணலாம். ஒரு சாரார் இதனைப் பெளத்த நூல் என்றும், மற்றொரு சாரார் இதனைச் சமண நூல் என்றும் கூறுவர். புறத்திரட்டில் காணப்பெறும் இதனது பாடல்கள் அனைத்தும் சிறந்த அறங்களைப் பற்றியே பேசுகின்றன. இதோ ஒரு செய்யுள் ! ...பொறையிலா வறிவு போகப் புணர்விலா விளமை மேவத் துறையிலா வனச வாவி துகிலிலாக் கோலத் தூய்மை தறையிலா மாலை கல்வி நல மிலாப் புலமை நன்னர்ச் நகரம் போலுஞ் சேயிலாச் செல்வ மன்றே." புறத்திரட்டில் காணப்படும் இதனது செய்யுட்களின் எண்ணிக்கை 66 ஆகும். யாப்பருங்கலம் என்னும் நூலின் உரையிலும் இரண்டு பாடல்கள் காணப்படுகின்றன. விருத்தப் பாவால் ஆய இக்காவியத்தின் நலன்களை ஒட்டக்கூத்தர் என்னும் புலவர்பெருமான் மிகவும் பாராட்டியுள்ளார். என்று தக்கயாகப் பரணி கூறுகின்றது. சிலப்பதிகார உரையிலும் இதனது பாடற் பகுதிகளைக் காணலாம். பிற ஆசிரி யர்களைப் போன்றே இவ்வாசி ரியரும் திருக்குறளினை அப்ப டியே தமது நூலில் கையாண்டுள்ளார் என்பதற்குப் வரும் பாடலை உதாரணமாகக் காட்டலாம்.