பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67 இவளைத் தனிக் கொண்டு ஒரு பர்வதத் தேறி. நீ இவ்வாறு சொல்லுதலில் யானுன்னைக் கொல்லத் துணிந்தேன்" என, குண்டலகேசியும், தற்கொல்லியை முற் கொல்வி யென்பதன்றே, இவனை யான் கொல்வேன்' என தினத்து, யான் சாகிறேளாகி தும்மை வலங்கொண்டு சாவல்", என, அதற்கிசைந்த காளான வலங் கொள்கின்றாள் வரையினின்றும் விழநாக்கினள். நூக்கக் காளானும் புத்தஸ் மரணத்தால் மோட்சித்தனன். குண்டலகேசியும் பர்த்ரு விரகத்துக் துறப்பன் என நினைத்து பரசமயங்கள் எல்லாம் நாவல் நாட்டு சயித்துப் பெளத்தர் கணம் கொண்டு முத்தி இப்பகுதி திரு சக்கரவர்த்தி நயிஞர் பதிப்பித்த நீலகேசியில் உள்ளது. இது மணிப்பிரவாள சடையிலானது. வீர சோழிய உரையாசிரியர் குண்டலகேசி நூலை அகலக் கவி என்று குறிப்பிட்டுள்ளார். இன்று புறத்திரட்டு என்னும் நூலில் இந்நூலினது 19 பாடல்கள் காணப்படுகின்றன. நீலகேசி உரையிலும் 25 முழுப் பாடல்களும், 180 பாடல்களின் பகுதிகளும் ஆங்காங்கு மேற்கோளாக எடுத்தாளப் படுகின்றன. ஐஞ்சிறு காப்பியங்கள் தமிழிலே வழங்கி வருகின்ற தொடர் நிலைச்செய்யுள் நூல்களைப் பெருங்காப்பியம், சிறு காப்பியம் என்று அறிஞர் கள் வகைப்படுத்துவர். சிறுகாப்பியம் என்ற நூல் வகைக் குள் அடங்குவன நீலகேசி, சூளாமணி, யசோதர காவியம், உதயண குமாரகாவியம், நாக குமார காவியம் என்ற ஐந்து காவியங்களாகும். இவற்றுள் உதயணகுமார காவியம் காப்பிய இலக்கணங்களை உடையதன்று. நாககுமார காவியம், யசோதர காவியம் என்ற இரண்டும் உதயண குமார காவியத்தைப் போன்றே பெயரளவிலேதான் காப்பியமாக வழங்குகின்றன. நீலகேசி என்ற நூலோ சிறந்ததொரு