பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71 பாட வேண்டுமானால்:உண்மையில், அப்புலவன் சிறப்புடையவனே. நக்கீரர் உறவு முறையினுல் ஈண்டு 'கபிலன்' என்று குறிப்பிடுகின்றார். பாரியைப் பாண்டியன் பெண் கேட்கப் பாரி பெண் கொடுக்க மறுத்ததே இப்போருக்குக் காரணமாகும். மேலும் முற்றுகைக் காலத்தில் பறம்பு நாட்டு மக்கள் குருவிகளைப் பழக்கி நெற் கொண்டு வரச் செய்து, ஆம்பல் பூவுடன் கலந்து உண்டு வாழ்நாளைப் போக்கி வெற்றி பெற்றார்கள் என்ற கர்ண பரம்பரைச் செய்தி உண்டு. ஆனால் குருவிக் கதை கற்பனையே யொழிய உண்மையில் நடந்ததன்று: நக்கீரர் போரில் குருவிகளின் உதவியைப் பற்றிக் கூறியிருப்பது முற்றிலும் கற்பனையே. ஒளவையும் குருவிகளைப் பற்றிக் கூறியுள்ளார். ஆனால் அவர்.

 "வரை புனை களிற்றொரு இரைதேர் கொப்பினவாகி மாலே படர்தல் காண்க"

என்று காலையில் புறப்படும் குருவிகள் நெற்கதிர்கள் இருக்கு மிடம் சென்று தின்று மாலையில் பறம்பு மலைக்குத் திரும்பும் என்று கூறியிருக்கிறாரே யொழிய போர்க் காலத்தே குருவிகள் உதவி செய்ததாகக் கூறவில்லை. கபிலர், ஒவையார் ஆகியோர் தம் பாடல்களைப் படித்த தற்காலத்தவர் முடி போட்டுக் கதைகட்டி விட்டனர் போலும். எனவே குருவிக் கதைக்குத் தக்க சான்றில்லேயாதலால், அது இயற்கைக்கு மாறுபாடானதால், அது கற்பனைக் கதைதான் என்று கொள்ள வேண்டும். முற்றுகை நீடித்ததினால் மூவேந்தரும் சலிப்புற்றனர். அதுகால் கபிலர் அவர்களிடம் போந்து "பெருமை பொருந்திய முரசினையுடைய மூவேந்தராகிய நீங்கள், எத்துணைக் காலம் முற்றுகை செயினும், பறம்பு என்னும் அரணில் உள்ளார்க்கு உணவுக்குக் குறை உளதாகாது. மூங்கில் நெல்லும், பலாப்பழமும், வள்ளிக் கிழங்கும், தேனும் ஆகிய நான்கு பொருள்களையும் அவ்வரண் மிகுதியாக உடையது. இவை உழவரது முயற்சியின்றியே இயற்கை