பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 73 கபிலர் பாரியைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்று ஒரு சிலர் கூறலாம். இது பொருத்தமற்ற தாகும். பாரியின் மீதுள்ள அளவு கடந்த அன்பால் அவனது பெருமையினையும் கலையினிடத்து அவன் கொண்டுள்ள அருமையினையும் கூறினாரேயொழிய, காட்டிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் பாடவில்லை.

பாரியின் முடிவு

   இறுதியாக பாரி சூழ்ச்சியால் மூவேந்தர்களாலோ அல்லது அவர்களால் ஏவப் பட்டவர்களாலோ கொல்லப் பட்டிருக்க வேண்டும். மூவேந்தரும் சூழ்ச்சியால் பாரியை வஞ்சித்துக் கொன்றனர் என்பதனே 112.ம் புறப்பாட்டுரையில், "ஒருவனே மூவேந்தரும் முற்றியிருந்து வஞ்சித்துக் கொன்றமையின்" என வருதலால் நாம் அறியலாம். ஆனால் இதற்கு வேறு சான்றில்லை. ஒளவையார் இதைப் பற்றிக் கூறவில்லை. கபிலர் கூறியதிலும் பாரியின் கொலைக்குச் சான் றில்லை.ஆனால் ஒரேயொரு சான்றுள்ளது. பாரி இறந்த பின் கபிலர்,
 "பாரியது அருமை யறியாற் போர் 
  எதிர்ந்து வந்த வேந்தர்"

என்று குறிப்பிடுவதில் காணுகின்ற இரக்கக் குறிப்பினால் பாரி சூழ்ச்சியினால் கொலையுண்டான் என்ற கர்ண பரம்பரைக் கதை எழுந்திருக்கலாம். மேலும் மூவேந்தர்கள் கொடியவர்கள் என்று குறிப்பிடப் பெறவில்லை. அவர்கள் கொலை செய்திருப்பின் கொடியவர்கள் என்று கூறப்பட்டிருப் பார்கள்.

 பாரி இறந்த பின், நிலாக் காலத்தில் ஒருநாள் பாரி மகளிர் தமது அரசு நிலையிட்ட திருவுடை நகர்க் கண்ணே இனிது மகிழ்ந்து விளையாடியதும், அடுத்த நிலாக் காலத்துத் தாம் தந்தையிழந்து தண் பறம்பிழந்து தமியராய்த் துச்சி