பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 இலக்கிய வகையின் வளர்ச்சியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது என்ற அடியின் இலக்கணத்தினால் உரையாசிரிய ராகிய பேராசிரியர் இப்பாவினங்களை அமைத்துள் ளார். இத்த அடியின் புறனடையாக அமைந்தவையே கும்மி, சிந்து முதலிய பாடல்கள். கலிப்பா ஒசை நயம் மிக்க இசைப்பாவாதலின், இவை யாவும் இசைப் பாடல்களே. கும்மி, சிந்து போன்ற யாப்பு வகைகளைப் பிற காலத்தில் இராமலிங்க அடிகள், பாரதியார், கவிமணி தேசி கவிநாயகம்பிள்ளை போன்ற கவிஞர்களும் மேற் கொண்டு பல அரிய பாடல்களை இயற்றியுள்ளனர். இதற்கு முன் சித்தர் பாடல்களில் இவை இடம் பெற்றி ருந்தன. கும் மி: இரு கைகளையும் ஒருவித சந்தத்தில் அமையுமாறு தட்டிக்கொண்டு ம க ளி ர் ஆடும் விளையாட்டு வகைகளில் ஒன்று. கும்மியாவது, வெண்ட ளை பிழையாத ஒரெதுகையுடைய எழுசீர்க் கழிநெடிலடி இரண்டு வருமாறு அமைதல். அடியின் முதற் சீரினும் ஐந்தாம் சீரினும் மோனை வருதல் வேண்டும். இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் அல்லாத வேறு தளைகள் வருதல் கூடாது. ஈற்றுச்சீர் பெரும்பாலும் விளங்காய்ச் சீராக வரும். ஆதி சிவனும்ஒர் ஆண்டிஅடா!-அவர்க்கு அன்பான பிள்ளைகள் நாமே, அடா! ஒதுமெய்ஞ் ஞானியர் யாவருமே-நமக்கு உற்ற உறவினர் ஆவர், அடா!