பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இலக்கிய வகையின் வளர்ச்சியும் அன்னப்பால் காணாத ஏழைகட்கு-நல்ல ஆவின்பால் எங்கே கிடைக்கும், அம்மா! என்னப்பா! யாம்பாடும் பாட்டையெல்லாம் -சென்று யாரிடம் சொல்லி அழுவோம், அம்மா! (8) இட்டெலி ஐந்தாறு தின்றோம் என்பீர்-நீங்கள் ஏதும் கருணை யிலிரோ? அம்மா! பட்டினி யாக இறந்திடினும்-நாங்கள் பாவம் பழிசெய்ய மாட்டோம், அம்மா! (9) இவை மூன்றும் ஏழைச் சிறுமியர் மனப்புழுக்கத்தை எடுத்துக்காட்டுவன.* இவண் குறிப்பிட்ட ஒன்பது பாடல்களும் கும்மிப் பாடல்கள். இவை வெண்பா இனத்தைச் சார்ந்தவை. இவற்றுள் மேற்குறிப்பிட்ட கும்மி இலக்கணம் அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம். குறவர் குடிசை நுழைந்தாண்டி-அந்தக் கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி துறவர் வணங்கும் புகழாண்டி-அவன் தோற்றத்தைப் பாடி அடியுங்கடி (i) மாமயில் ஏறி வருவாண்டி-அன்பர் வாழ்த்த வரங்கள் தருவாண்டி தீமையி லாத புகழாண்டி-அவன் சீர்த்தியைப் பாடி அடியுங்கடி (2) பன்னிரு தோள்கள் உடையாண்டி-கொடும் பாவிகள் தம்மை அடையாண்டி என்னிரு கண்கள் அடையாண்டி-அவன் ஏற்றத்தைப் பாடி அடியுங்கடி (3) 3. தே.வி : மலரும் மாலையும்-செல்வமும் சிறுமையும்.