பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 - இலக்கிய வகையின் வளர்ச்சியும் காதல் ஒருவனைக் கைப்பிடித்தே, அவன் காரியம் யாவினும் கைகொடுத்து மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!" (8) சிந்து : ஒரேதுகை பெற்ற இரண்டடிகள் அள வொத்து வருதல் சிந்த கும். இரண்டேயன்றி நான்கடி கள் ஒரெதுகையாய் வருதலும் உண்டு. ஒரடியின் மோனைத் தொடை எடுப்பின் முன்னும் பின்னும் உள்ள அரையடி இங்கு அடியெனவே வழங்கப்பெறும். இது குறளடி முதல் எல்லா அடியாலும் வரும். தளை வரையறை இல்லை. மோனைத் தொடை எடுப்பின் முன்னும் உள்ள அடிகள் ஒத்துவருவது சமனிலைச் சிந்து: ஒவ்வாது வருவது வியனிலைச் சிந்து. நாதர்முடி மேல் இருக்கும் நாகப்பாம்பே' நச்சுப்பையை வைத்திருக்கும் நல்லப் பாம்பே' பாதலத்தில் குடிபுகும் பைகொள் பாம்பே' பாடிப்பாடி நின்றுவிளை யாடுபாம்பே! (20) குற்றமற்ற சிவனுக்குக் குண்டல மானாய் கூறுந்திரு மாலினுக்குக் குடையு மானாய் கற்றைக்குழல் பார்வதிக்குக் கங்கணமானாய் காவாமல் உளங்கனித்து ஆடுபாம்பே! (22) மண்டலத்தைத் தாங்குமிக வல்லமை கொண்டாய் மாயனுக்குப் படுக்கைக்கு வண்ணப்பாயானாய்! 5. பா.க : பல்வகைப் பாடல்கள்-பெண்கள் விடுதலைக் கும்மி.