பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 93 கண்டபடை நடுங்கிடக் காட்சியும் பெற்றாய் கண்னேசெவி யாகக் கொண்டாய் . ஆடு பாம்பே' (23) இவை ஒரெதுகை பெற்ற இரண்டடிகள் அளவொத்து வந்த சமனிலைச் சிந்து வகைகள். வாரும் வாரும் தெய்வ வடிவேல் முருகரே வள்ளி மணாளரே, வாரும் புள்ளி மயிலோரே வாரும் (1) சங்கம் ஒலித்தது தாழ் கடல் விம்மிற்று சண்முக நாதரே வாரும் உண்மை வினோதரே வாரும் (2) பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று பொன்னான வேலரே வாரும் - மின்னார் முந் நூலரே வாரும் (3) இவை மூன்றும் வள்ளல் பெருமான் அருளியவை." இவை ஒருவகைச் சிந்துவகை. 6. பாம்பாட்டி சித்தர் பாடல்கள். மேம்போக்காக நோக்கினால் இவை சம்பிரதாயக் கருத்து களைக் கொண்டவையாகத் தோன்றும், ஆனால் அடிப்படையில் ஆழ்ந்த தத்துவக் கருத்துகளைக் கொண்டவை. பாம்பு வடிவாக மண்டலித்துள்ள குண்டலினி சக்தியை எழுப்பி, அதன் மூலம் ஆன்மா தரிசனம் செய் வதை இப்பாடல்கள் குறிப்பிடுகின்ற ன. 7. முதல் திருமுறை-51 சண்முகர் வருகை