பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 - இலக்கிய வகையின் வளர்ச்சியும் நிறுத்தி விடுகின்றது தனிப்பாடல்கள்’ என்ற பகுதியி லுள்ள காலைப் பொழுது’, ‘மாலைப் பொழுது நிலா வும் வான்மீனும் காற்றும்', 'மழை அக்கினிக் குஞ்சு’ "அழகு தெய்வம்', 'கவிதைத் தலைவி’, ‘கவிதைக் காதலி' 'மகாமகோபாத்யாயர்’, என்ற பாடல்களின் சுவையும் அவை தரும் கவிதையநுபவமும் சொற் களால் கூற )ء التينغ } للامجنا لعلا ‘சுயசரிதை', 'பாரதி அறுபத்தாறு', 'கண்ணன் பாட்டு", "பாஞ்சாலி சபதம்’, ‘குயில் பாட்டு இவை யாவும் படிக்கப் படிக்கப் படித்தேனாக இனிக்கின்றன. இவற்றை விரிவாக விளக்க நேரம் இல்லை, பாரதி யாரை அவாதம் நூற்றாண்டு விழா நினைவாக அவரைப் போற்றும் வகையில் (1) பாரதீயம், (2) பாஞ் சாலிசபதம்-ஒரு நோக்கு (3) மண்ணன் பாட்டுத் திறன் {4} குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு என்ற தலைப்புகளில் நான்கு நூல்களை வெளியிட்டு 'குருவிக்குத் தகுந்த இராமேசுவரம்' என்று மனநிறைவு பெற்றுள்ளேன். பாரதிதாசன் நூற்றாண்டு விழா நினைவாக (1) பாவேந்தர் பாரதிதாசன்-ஒரு கண்ணோட்டம் (2) பாவேந்தரின் பாட்டுத்திறன் (3) பாண்டியன் பரிசுஒரு மதிப்பீடு என்ற மூன்று நூல்களை எழுதினேன். முன்னது வெளி வந்து மிகுந்த செல்வாக்குடன் புழங்கு கின்றது. பின்னவை இரண்டும் பாலுக்கு அழும் குழந்தைகள் போல் என் இல்லத்தில் உறங்கிக் கிடக் கின்றன. இவற்றில் பாவேந்தரின் கவிதைகளைத் தெளிவாக ஆய்ந்துள்ளேன். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் (1) மலரும் மாலையும் (2) மருமக்கள் வழிமான்மியம் இரண்டும் அற்புதப் படைப்புகள். சனவரி 1995 தஞ்சையில் ந்டை பெற்ற எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டில் பண்பாட்டு கோக்கில் கவிமணி’ என்ற ஓர் ஆய்வுக் கட்டுண்ர