பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104) இலக்கிய வகையின் வளர்ச்சியும் கூடிவிளை யாடு பாப்பா!-ஒரு குழந்தையை வையாதே பாப்பா!! என்று தொடங்குகின்றது. கோழி, காக்கை, பசு, நாய், குதிரை, மாடு, ஆடு இவற்றை ஆதரிக்க வேண்டும் என்பனவும், பொய் சொல்லல். சோர்வு, சோம்பல், தாய் சொல்லைத் தட்டாதிருத்தல், நாட்டுப்பற்று, தமிழ், இந்திய நாடு, சாதி, நீதி, அன்பு ஆகியவை பற்றிய கருத்துகளும் குழந்தை அநுபவங்களை யொட்டியவை. இவரை யொட்டியும், இவர் காலத்திலும் குழந்தை இலக்கியத்தில் கவனம் செலுத்தியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கள். 'மலரும் மாலையும்’ என்ற இவர்தம் படைப்பில் மழலை மொழி என்ற பகுதியில் காணப்படும் முத்தந்தா என்பது முதல் "பாண்டியாடுதல் முடிய உள்ள பதினாறு பாடல்களும் குழந்தை யநுபவத்தை யொட்டியவைகளாகும். கண்ணே மணியே முத்தந்தா, கட்டிக் கரும்பே முத்தந்தா, வண்ணக் கிளியே முத்தந்தா, வாசக் கொழுந்தே முத்தந்தா? இப்பாடல் மழலை மொழியாகும், மழலையாருக்குப் பொருத்தமான பாடல். தேவாரப் பாகும் திருவாசகத் தேனும் நாவார உண்ண எம்மான் நன்மகவாய் வந்தானோ? 1. பா.க: பலவகைப் பாடல்கள், பாப்பா பாட்டு 2. மலரும் மாலையும்’-முத்தந்தா