பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 101 நாலா யிரக் கவியின் நல்லமுதம் உண்டிடமால் பாலாழி நீங்கியொரு பாலகனாய் வந்தானோ? என்பன போன்ற தாலாட்டுப் பாடல்கள் குழந்தை அநுபவத்தை யொட்டி அவர்கள் செவிக்கினிய ஓசை யில் இசைக்கும்போது குமுந்தை அமைதியாகத் உறங்கும். பாடல்கள் கேட்போரையும் பரவசப்படுத் தும். கோழி, நாய், கிளி, பசு, பால் போன்ற பாடல்கள் அற்புதமானவை. குழந்தையின் நாவில் எளிமையாகத் தாண்டவமாடி இனிமையாகக் கொஞ்சுபவை. பிற பாடல்களும் இங்ங்னமே குழந்தை, சிறுவர்களின் அநுபவத்தை மீறிய பாடல்கள் அல்ல என்பதைக் கண்டு பாராட்டப் பெறவேண்டியவை. பாரதியாரை விடச் சற்று வளர்ந்த விரிந்த நிலையில் இவை அமைந் துள்ளன. இந்த நிலையில் பாவேந்தர் பாரதிதாசன் வருகின் றார். இவர் (1), ஒரு தாயின் உள்ளம் மகிழ்கின்றது (2) இளைஞர் இலக்கியம் என்ற இரண்டு தனி நூல்களை இயற்றிச் சிறுவர், இளைஞர் இலக்கியப் படைப்பை மேலும் விரிவர்க்கியுள்ளார், தாலாட்டு, இயற்கை; (இதில் ஆறு, தோட்டம், தோப்பு, பூச்செடி, முக்கனி, அடங்கும்) வானச்சூழ்நிலை (இதில் கதிரவன், நிலவு, விண்மீன்கள் அடங்கும்), பழக்கங்கள், இயக்கங்கள், ஆகியவை பற்றியும்; பள்ளிப் பிள்ளை கட்கு-எண் கற் பித்தல், எழுத்து கற்பித்தல் பற்றியும் பாடல்கள் பாடி குழந்தை இலக்கியத்திற்கு வளம் சேர்த்துள்ளார். எடுத்துக்காட்டுகளாகச் சில: 3. டிெ-தாலாட்டு 14, 18