பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் i05 பற்றியும் அறிகிலேன். அழ. வள்ளியப்பா செட்டி நாட்டவர். நான் காரைக்குடியில் பணியாற்றிய காலத்திலிருந்தே எனக்கு அறிமுகமானவர். அடியேன் திருப்பதி சென்றபின்னரும், அடுத்து சென்னையில் குடியேறிய பின்னரும் அறிமுகம் நட்பாக மாறியது, அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக (அவர் மறையும்வரை) இருந்தபோது நட்பு ஆழமாகியது" குழந்தைப் பாடல்கள் பற்றி அவரிடம் உரையாடும் வாய்ப்புகளும் ஏற்பட்டன. குழந்தைப் பாடல்கள் பாடுவோர் தாமும் குழந்தையாக மாறி குழந்தை நிலைக்கு இறங்கினால்தான் அவர் பாடும் குழந்தைப் பாடல்கள் அற்புதமாக அமையும் என்ற உண்மையை உணர்ந்தேன். இவர்தம் குழந்தைப் பாடல்களை நன்கு படித்து, சுவைத்து, பாராட்டி, ஆசியும் கூறியுள்ளார் கவிமணி தேசிக வி காயகம் பிள்ளை அவர் வாழ்த்துகூறி வாழ்த்திய ஏழு பாடல்களில்? இரண்டை மட்டிலும் ஈண்டுத் தருவேன். பள்ளிச் சிறுவர் சிறுமியர்கள் பாடிப் பாடி மகிழ்வெய்த தெள்ளத் தெளிந்த செந்தமிழில் தேனார் கனிகள் செய்து தரும் வள்ளி யப்பா நின்னினிய "மலரும் உள்ளம்’ என்றென்றும் புள்ளி மயில்வா கனன் அருளால் புவியில் வாழ்க வாழ்கவே. 'பாலும் பழமும் ஏனம்மா? பசியே இல்லை!" எனக் கூறிச் சீலச் சிறுவர் சிறுமியர்கள் சிறந்த மலரும் உள்ள மிதைக் 12. மலரும் மாலையும்.கதம்பம்-17 (1.7)