பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 இலக்கிய வகையின் வளர்ச்சியும் பேச்சுப் பயிற்சி : மொழி கற்பித்தலில் பேச்சுப் பயிற்சி இன்றியமையாதது. குழந்தைகள் சற்று வளர்ந்த நிலையில் இல்லத்தில் தாயும் குழந்தைப் பள்ளிகளில் ஆசிரியர்களும் குழந்தைகட்குப் பேச்சுப் பயிற்சி தரவேண்டும். அப்போதுதான் குழந்தையின் நாக்கு திருந்தும். செந்தமிழும் நாப்பழக்கம் அல்லவா? நான் குழந்தைப் பருவத்தில் சற்று வளர்ந்த நிலையில் (1922 அப்போது வயது 6) படித்த பாட நூலில் வரும் ஒரு பாடம்; கண்ணனைப் பற்றியது. கண்ணன் படம்; அதன் கீழ்: கண்ணன் தின்னும் பண்டம் என்ன? கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய் அண்ணன் எழுதிய கடிதம் எங்கே அண்ணன் எழுதிய கடிதம் இதுதான் இதற்குமேல் நினைவு வரவில்லை. சொன்னவற்றையே திருப்பித் திருப்பிச் சொல்லும் பாங்கில் இதில் சொற்கள் அமைந்திருப்பதால் நாக்குப் பயிற்சிக்கு ஏற்றனவாக வாக்கியங்கள் அமைந்திருந்தன. இனி, பேச்சுப் பயிற்சிக்கு ஏற்ற சில பாடல்களைக் காட்டுவேன். . சின்னஞ் சிறுகுருவி போல-நீ திரிந்து பறந்துவா பாப்பா! 14. அக்காலத்தில் கா. கமச் சிவாய முதலியார் முதல் ஐந்து வகுப்புகளுக்கு அற்புதமான பாடநூல்கள் எழுதியிருந்தார். இந்த நூல் களே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ற மூன்று மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பெற்று புழக்கத்தில் இருந்து வந்தன. போட்டி இல்லை. இவை அனைவராலும் போற்றத்த்க்கனவாக இருந்தன.