பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 இலக்கிய வகையின் வளர்ச்சியும் கிளியே! என்ற பெயரில் ஒலிப் பேழைகளாகத் தயாரில் உள்ளன. பாடல்கள் அடங்கிய நூலும் பேழைகளும் விற்பனையாகிக் கொண்டுள்ளன. நான்காவது ஒலிப் பேழையும் தயாராகிக் கொண்டுள்ளது. வண்ணப் படங்கள் அடங்கிய நூலும் பேழைகள் நான்கும் ஒவ்வொரு குழந்தைப் பள்ளியிலும் மழலையர் உள்ள குடும்பங்களிலும், இன்றியமையாது இருக்க வேண்டி யவை. மழலையர்களின் தாத்தாவும் பாட்டியும் இருக்கும் இல்லங்களில் பெரிதும் பயன்படும். பேரன் பேத்திமார்கள் 10-12வயது வரையில் பாட்டன் பாட்டிமார் சேர்ந்து குடும்பமே கேட்டு மகிழ்வதற்கு ஏற்றவை. குழங்தைக் கல்வி : இவ்விடத்தில் குழந்தைக் கல்வி பற்றிய சில கருத்துகளைக் குறிப்பிட விரும்புகின்றேன். பத்து ஆண்டுகட்குமேல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி யில் பணியாற்றிய அநுபவமும் பல உளவியல் கருத்து களும் அடங்கிய இக்குறிப்புகள் குழந்தைப் பாடல் களின் நோக்கத்தையும் அவை குழந்தைப் பள்ளிகளில் பயன்படும் முறையையும் விளக்குவனவாக இருக்கும், மேனாட்டு அறிஞர்களில் ரூசோ, பெஸ்டலாஸ்ஸி, ஃபீர:பக், :ன் டி எரி போன்ற அ றி ளு ர் க ள் குழந்தைக் கல்வியில் அதிகக் கவனம் செலுத்திச் சில முறைகளை வகுத்துக் காட்டியுள்ளனர். ரூசோவின் எமிலி என்ற நூல்தான் புதிய முறைகளின் வித்து எனலாம். ரூசோவின் கல்வி பற்றிய கருத்துகள் அதில் தெளிவாகக் காணப்பெறுகின்றன. கல்வி கற்பிப்ப தில் குழந்தைதான் முக்கியக் கூறு. மனிதனின் பண்பாடல்ல என்பது அவன் கருத்து. அதாவது குழந்தையை மையமாக வைத்துக் கல்வி புகட்ட வேண்டுமேயன்றி பாடப் பொருளை வலிந்து புகுந்தக் கூடாது என்பது இதன் கருத்தாகும். இதனாலதான் ரூசோவைக் கல்வி முறையின் காபர்னிகஸ்" என்று