பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் i is ரின் கருத்தாகும். குழந்தைகள் விளையாடுவதற்கு ஆசிரியர் உற்சாகம் ஊட்ட வேண்டும். விளையாட் டில் காணும் நல்ல கூறுகளில் கவனம் செலுத்த வேண்டும்; தேவையற்ற அல்லது முறையற்ற கூறு களைத் தவிர்த்தல் வேண்டும். குழந்தைகளின் தோட்டத்தில் உரிமை,விளையாட்டு, மகிழ்ச்சி ஆகிய மூன்று கூறுகள் இடம் பெறுதல் வேண்டும். இவ்வாறு இடம் பெற்றால்தான் குழந்தை களின் உணர்வுகள் நன்முறையில் வெளிப்படும்" அங்குப் பாடநூல்கட்கு வேலை இல்லை. குழந்தை கட்கும் குறிப்பிட்ட மனப் பயிற்சி இல்லை. குழந்தை களின் உணர்வுகள் மூன்று விதமாக வெளிப்படு வதற்குப் பயிற்சிகள் அளிக்கப் பெறுகின்றன. அவை பாட்டு, இயக்கம், செய்கை; இவை மூன்றும் நன்றாகச் சேர்ந்தே பயின்று வரும். எடுத்துக் காட்டாக ஒரு கதையைக் கற்பிக்க வேண்டுமானால் அது பாட்டாகக் கற்பிக்கப்பெறும்; கற்கும் போது ஆட்டமும் அபிநய மும் இருக்கும்; கற்றவுடன் அஃது ஒவியமாகத் தீட்டப் பயிற்சி தரப்பெறும். எனவே குழந்தையின் கற்பனையும் எண்ணமும் பருப்பொருட்டாகத் தூண்டப் பெற்று குழந்தை உற்சாகத்தை பெறு கின்றது. குழந்தையின் புலன்கள். நல்ல பயிற்சி யினைப் பெறுகின்றன. தக் கபாட்டுகளைத் தேர்ந் தெடுத்து, ஏற்ற விளையாட்டுகளை ஆராய்ந்து, வேண்டிய ஓவியங்களைக் காண்பதே ஆசிரியரின் வேலையாக இருக்கும். குழந்தைகள் இம் மூன்றின் மூலம் நல்ல மொழிப்பயிற்சியினை அடைகின்றனர்." கதைப்பாடல்கள் மலரும் மாலையிலும், பா வேந்தர் இளைஞர் இலக்கியத்திலும் உள்ளன . 20. தமிழ் பயிற்றும் முறை - (மூன்றாம் பதிப்பு) பக் (70-77)