பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 இலக்கிய வகையின் வளர்ச்சியும் குழந்தைக் கவிஞரின் மலரும் உள்ளத்'திலும், குழ கதிரேசனின் மழலைப் பூங்கொத்திலும் உள்ளன. அவற்றை ஆசிரியர் பயன்படுத்திக் கொள்ளலாம். குழ. கதிரேசனால் மிக்கக் கவனத்துடன் தயாரிக்கப் பெற்றுள்ள ஒலிப்பேழைகள் ஆசிரியருக்கும் தாய்மார் கட்கும் கைகொடுத்து உதவும் சிறந்த சாதனங்களாகும். கால்சட்டை, உடற்சட்டை, பனியன் போன்றவை குழந்தைகளின் உடலுக்கு ஏற்றவாறு அமைதல் போல குழந்தைப் பாடல்கள் அவர்களின் மனத்திற்கேற்ற வாறு தயாரிக்கப் பெற்றவையாகும் என்பதை தாய்மார் களும் குழந்தைப்பள்ளி ஆசிரியர்களும் மனத்தில் இருத்திச் செயற்பட்டால் குழந்தைச் கல்வி செழித்து வளரும்; எதிர்பார்க்கும் பயன்களையும் நல்கும். அடுத்து :புதுக்விதை' பற்றிய விவரங்களைக் காண்போம். 7. புதுக்கவிதை தமிழ் இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்றாண் டில் தோன்றின புதிய முயற்சியில் பிறந்தது புதுக் கவிதை. இது தமிழன்னைக்குச் சூட்டப்பெற்ற புதிய தோர் அணியாகும். இஃது இயல்பாகவே ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியாகவே கொள்ளப் பெறலாம். ஆங்கிலத்தில் New poetry என்று கூறப் பெறுவதை யொட்டியே தமிழில் புதுக் கவிதை” என்ற திருநாமம் இப்புது முயற்சிக்கு இடப்பெற்றதாகக் கொள்ளலாம். இதுபற்றி வரலாற்றை விரிக்க நேரம் இல்லை. 1. விவரம்-இந்த நூலாசிரியரின் புதுக் கவிதைபோக்கும் கோக்கும் என்ற நூலிலும் பாட்டுத் திறன் (மூன்றாம் பகுதி) என்ற நூலிலும் கானலாம்.