பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் j is? புதுக்கவிதை இன்னதென்பதை ஒரு புதுக் கவிதையே விளக்குகின்றது. இலக்கணச் செங்கோல் யாப்பு சிம்மர்சனம் எதுகைப் பல்லக்கு மோனைத் தேர்கள் தனிமொழிச் சேனை பண்டித பவனிஇவை எதுவும் இல்லாதகருத்துகள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக் கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை” இதே சமயத்தில் மரபுக் கவிதையை எள்ளும் பாங்கில் புதுக்கவிதையைப் படைத்துக் காட்டுகின்றார்: ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியை யாப்புக கிழவி' என்ற தலைப்பில். அதே வருகின்றாள் யாப்புக் கிழவி! எதுகை முதுகைப் பூட்டு வில்போலக் கூனிக் கொண்டு மோனை வாயால் வாழ்த்து வசை இரண்டும் முனு முனுத்தபடி சுரையாழ அம்மிமிதப்ப என்ற பாட்டைச் சுறுசுறுப் பில்லாமல் அராகமாய்ப் பாடிக் கொண்டு அதோ வருகின்றாள் யாப்புக் கிழவி! மேற்கதுவாயும் கீழ்க்கது வாயும் பொக்கை வாயாய் ஆகிவிட 2. ஊர்வலம் (மு. மேதா)-70