பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 இலக்கிய வகையின் வளர்ச்சியும் உன் அடியார்கள்தற்போது ஆஸ்தியைச் சுமக்கிறார்கள்! இது வாலி புன்னகை மன்னன்’ என்ற தலைப்பில் காந்தியடிகளைப் பற்றி எழுதிய கவிதையின் ஒருபகுதி. இந்தப் பாடற் பகுதிகளில் சாதாரணக் கருத்துகள் கவிதையேறி அற்புதமாகத் திகழ்வதைக் காணலாம். இப்பகுதிகளை மேலோட்டமாகப் படிக்கும் போது 'வசனம் போல் நடக்கின்றன; சற்றுச் சிந்தித்துப் படிக்கும் போது கவிதை'யாகி விடுகின்றன. சிறகுடன் பறப்பது போன்ற உணர்ச்சி மேலிடுகின்றது. உருவம் : ஒரு நாமம் ஒர் உருவம் இல்லாத ஆண்டவனைப் போல் புதுக்கவிதைக்கும் உருவம் இல்லை என்று சிலர் மதிப்பிடுகின்றனர். இது தவறு: மரபுக் கவிதைக்கு உள்ள இறுக்கமான கட்டுப் பாடு கள்-யாப்பு விதிகள்-புதுக்கதைக்கு இல்லை என்ப தால் இக்குழப்பம் எழுகின்றது. உருவச் சிறப்பு இல்லாத இலக்கியங்கள் இல்லை; அப்படி இருப்பவை இலக்கியங்கள் ஆகா. கவிதை இருக்கட்டும்; புதினம், கட்டுரை, சிறுகதை போன்ற உரைநடை இலக்கியங் கட்கும் உருவச்சிறப்பு உண்டு என்பதை இக்கால இலக்கியத்தை ஆழ்ந்து கற்போர் நன்கு அறிவர் புதுக் கவிதையின் உருவத்தைப் பற்றி மீரr (மீ. இராஜேந்திரன்) கூறுவது! இன்றைய கவிஞர்கள் யாப்புணர்வு இல்லாமல் தம் கவிதைகளைப் படைக் கின்றனர். தாம் மேற் கொள்ளும் சாதனம் செய்யுளா? வசனமா? என்று அவர்கள் அலட்டிக் கொள்வதில்லை. இவை இரண்டுமே கவிதையின் வடிவம். இவ்வடிவம் புராணத்தில் வரும் மன்மதனை ஒவியத்தில் எழுதிக்