பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 128 காட்டுவதற்கு ஒப்பானதாகும். சிவனால் எரிக்கப்பெற்ற மன்மதன் இர தி தேவியின் கண்களுக்கு மட்டிலும் தென்படுவானாம். அது போல இலக்கணத் தெய்வத் தின் நெற்றிக்கண் நெருப்பிற்கு இரையான புதுக் கவிதையின் உருவமும் உண்மையான இலக்கிய இரதிகட்கே தென்படக்கூடும்'8 கவிதையின் கருத்து வெளிப்படும் அழகே கவிதையின் வடிவம். ஒரே பாவினத்தால் எழுதப்பெறும் இரண்டு கவிதை கள் வடிவத்தில் ஒன்றுபோல் காணப்பெறினும் அவை வெவ்வேறு வெளியீட்டுத் தன்மையைக் கொண்டிருக்க முடியும். எடுத்துக்காட்டாகத் திருமங்கையாழ்வாரின் திருப்பாசுரங்களும் திருநாவுக்கரசரின் திருப்பாடல் களும் தாண்டகப் பாணியில் ஒன்று போலத் தோன்றி னாலும் அவற்றின் வெளியீட்டுத் தன்மை வேறு பட்டிருப்பது நுணுகி உணர்வார்க்கே புலனாகும். அங்ங்னமே பாரதிதாசனும் சுரதாவும் எண்சீர் விருத்தத் தில் கவிதைகள் படைத்தாலும் அவற்றின் வெளி யிட்டுத் தன்மை வேறு பட்டிருப்பதைக் காணலாம். 'இவ்வாறு உணர்த்தும் முறை கவிஞர்களின் மன வெளிக்குப் புலப்படும் சூக்குமத் தன்மை கொண்டது. எனவேதான் புதுக் கவிதையின் உருவம் திருமலை நாய்க்கர் மகரலின் தூணைப் போலத் துாலமாகத் தெரியவதில்லை' என்று எழுதினார் மீரா , உருவத் தாலேயே சிறக்கும் சில புதுக்கவிதைகட்கு எடுத்துக் காட்டுகள் : (1) போக்குவரத்து நாடகத்தின் நடுவே.8. மீரா : புதுக் கவிதையின் உருவம் (அன்னம் மலர்-1976) 9. மீரா : புதுக்கவிதையின் உருவம் (அன்னம் வெளியீடு.1976)