பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ . இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும் அறிஞர் பெருமக்களே, மாணவச் செல்வங்களே, பல்கலைக் கழகமும் தமிழ் இலக்கியத்துறையும் கல்கி அறக்கட்டளைச் சொற்பொழிவு (1995-க்குரியது) நிகழ்த்துமாறு எனக்கு அழைப்பு விடுத்தமைக்கு மிக்க நன்றி. கடந்த அறுபதாண்டுகட்குமேல் நான் மேற்கொண்டு ஆற்றிவரும் இலக்கியத் தொண்டினைப் பாராட்டித் தமிழ் இலக்கியத் துறையில் மதிப்பியல் பேராசிரியராக நியமனம் செய்து பெருமைப்படுத்திய தையும் நினைவு கூர்கின்றேன். - இந்தப் பல்கலைக் கழக வரலாற்றில் இன்று நான் ஒருவனே வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியராக உள்ளேன் என்ற பெருமிதம் எனக்கு உண்டு. புதிய விதிகளின்படி 70 அகவைக்கு மேல் ஒருவரும் மதிப் "பியல் பேராசிரியராக இருக்க முடியாது. 1940-41 இல் நான் சைதை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றபோது நாடோறும் மாலை நேரங் களில் தியாகராச நகரில் உள்ள பனகல் பூங்காவுக்கு வருவதுண்டு. கால்நடையாகத்தான்-குறுக்கு வழியில்,