பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 இலக்கிய வகையின் வளர்ச்சியும் சாதி வேண்டும் என்றே சாற்றும். 'ஜாதி என்ற சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லை கண்டறிய முடியாத நிலையைக் கிண்டல் செய்கின்றது இக்கவிதை. 5. சில இலக்கியக் கொள்கைகள் : மேனாடுகளில் கருத்து வளர்ச்சியின் வேகத்தில் சில இயக்கங்கள் இலக்கியக் கொள்கைகளாக மலர்ந்தன. للانع لإتات وتشي மேனாட்டு இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள இவற்றின் அடிப்படையில் எஸ்ராபவுண்டு, டி.எஸ். எலியட், வால்ட் விட்மென், எட்வர்ட் கார்ப்பெண்டர் போன்ற அமெரிக்க, ஐரோப்பிய, ஆங்கிலக் கவிஞர் களும்; மாயா கோவெஸ்கி போன்ற இரஷ்யக் கவிஞர் களும் தம் கவிதைகளை அமைத்தனர். இவர்களைப் பின் பற்றி நம் நாட்டுப் புதுக்கவிஞர்களும் தம் கவிதை களைக் கொள்கை கனத்துடனும் கருத்து வளத்துடனும் படைத்து வருகின்றனர். சில கொள்கைகளை எடுத்துக் காட்டுகளுடன் விளக்குவேன். (1) படிமக் கோட்பாடு : 'அறிவாலும் உணர்ச்சி யாலும் ஆன ஒரு மனப்பான்மையை ஒரு நொடிப் பொழுதில் தெரியக் காட்டுவதுதான் படிவம் என்பது என்பது படிமத்தைப் பற்றிய எஸ்ராபவுண்டின் கூற்று. எ-டு: L GR) கோணங்களில் கண்ணனைப் படம் பிடித்த கேமரா! (2) குறியீட்டியல் : இந்தக் கொள்கை 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மல்லார்மி வெர்லெய்ன்: