பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் i87 ரிம்பார்டு போன்ற ஃபிரெஞ்சுக் கவிஞர்களால் உருவாக்கப்பெற்ற ஒர் இலக்கியக் கொள்கை இலக்கியக் குறியீடு தனித்தன்மை வாய்ந்தது. தொல் கதைகள், புராணங்கள் சார்ந்த குறியீடுகள் உள்ளன. அசோகசக்கரம், இராட்டினம், அரிவாள், கத்தி, சம்மட்டி போன்ற சில பொருள்களும் குறியீடுகளாக அமைகின்றன. தேர்வுச் சின்னங்கள் கட்சிக் குறியீடு களாக அமைகின்றன. (எ-டு) : வாரணங்களும் தோரணங்களும் @越p ஒரு காளை புகுந்து கைத்தலம் பற்றுவதைக்காைவில் மட்டுமே கண்டு கொண்டிருக்கும் ஆண் டாள்கள் நாங்கள் எங்களுடைய ரெங்கநாதர்களைப் போலவேகல்லாக இருக்கவே பிரியப் படுகின்றோம்! இதில் ஆண்டாள் திருமணம் ஆகாத முதிர் கன்னி யர்களைக் குறிக்கின்றன. - (3) மீமெய்ம்மையியல் : கலை என்பது காம விகாரங்களின் படைப்பாகவும் செயற்பாடாகவும் இருப்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்ற ஃபிராய்டின் மூல தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த இலக்கியக் கொள்கையாகும் இது. காமக் கிளர்ச்சிகளையும் சாவையும் வாழ்வையும்