பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 இலக்கிய வகையின் வளர்ச்சியும் கவிதை நனவோடையில் அமைந்தது எனக் கொள்ள லாம். விரிவஞ்சி ஈண்டு விளக்கப் பெறவில்லை.98 (5) கொள்கை : அறிவாளிகளின் மன அமைப்பிலும் போக்கிலும் ஒரு புதிய பார்வையை உண்டு பண்ணுவதற்கு முயன்ற இருப்பியலைப் (Existence) பற்றிய பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு புதிய தத்துவம். புதுக் கவிதையொன்று இக்கொள்கைக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது. 'கவி வேதனை: என்ற தலைப்பில் காணப்பெறும் ஒரு கவிதை, கவிஞனது போதை மயக்கத்தையும் அவனது படைப்பைப்பற்றியும் கூறுகின்றது. விட்டில் விளக் கில் விழுந்து சாவதை 61 அடிகளில் விவரித்து விட்டு இக்காட்சியைக் காண்ாத அதே சமயத்தில் இப் படி மத்தின் மூலம் மனிதன் படும் துன்பத்தையும் சிந்தித்துப் பார்த்துவிட்டு, இக்காட்சியைக் காணாத எழுத்தாளன் எங்கே உள்ளான் என்ற வினாவை விடுக்கின்றார் கவிஞர்; அதற்கு மறுமொழியும் தரு கின்றார். எழுத்தாளன் எங்கே! கேட்கப் போனேன். நடப்பூர் தாண்டி நினைவூர் கடந்தபின் கற்பனைத் தோப்பிலே கள்ளுக் கடையில் கவிஞனைக் கண்டேன். போதைக் கிறக்கம்! 25. புதுக் குரல்கள்-நரகம் (சி. மணி) பக்.75 26. இவ்வாசிரியரின் பாட்டுத் திறன்' என்ற நூலில் பக் (472-479) கான் க. 27. கோடைவயல்-புக், 9