பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் j41 எழுதிய கவிதை எங்கே கிடைத்தது? கேள்வி குறைந்தது. பதில் ஒரு குமுறல். இருட்குகை ஒன்றில் இலக்கியப் பொருளில் சோதனை நடந்ததாம் தட்டித் தடவினான் சிந்தனைக் கையில் வந்ததை எடுத்து வீசினான் வெளியில். இருளில் குமைந்த பொருளை ஒளியில் கண்டவன் திகைத்தான்! தத்துவம் எங்கே? பொருளும் மெய்யா? பயனும் உண்டா? எனக்குத் தெரியவே தெரியாது! கவிஞன் மதுவின் அவதியில் இருப்பதால் தெரியாது. இந்தக் கவிதையில் கவிதைக்கும் சமூக வாழ்க்கைக் கும் தொடர்பே இல்லை என்றும், ஒரு கவிஞன் உள்ளத்தில் அது மது மயக்கம் போன்ற உணர்வினால் தோன்றுவதென்றும், அதனை யாரும் அறிந்துகொள்ள முடியாது என்றும் கூறுகின்றார். இங்கு அறிபவனும் அறியப்படுவதும் ஐக்கிய நிலையில் இருப்பது தெரி கின்றதன்றோ?