பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 இலக்கிய வகையின் வளர்ச்சியும் அடி வரையறை இல்லாதனவாக நூல், உரை பிசி, அங்கதம், முதுசொல், மந்திரம் என்ற பாவகைகள் தோன்றின என்றும் எடுத்துக் காட்டுகளுடன் நோக்கினேன். சாதாரண மக்களுக்கு-ஏன் எல்லோருக்கும்செல்வத்தைப் பெருக்குவதில் ஆசை எழுவது போல் புலவர்கட்கு இலக்கியச் செல்வத்தைப் பெருக்குவதில் ஆசை கிளர்ந்தெழுந்ததன் காரணமாகப் புதிய வகைப் பாடல்கள் எழுந்தன என்றும், கும்மி, சிந்து, தாலாட்டு ஊசல் பாடல்கள் எழுந்தன என்றும், இவற்றைச் சித்தர்கள் வள்ளல் பெருமான், பாரதியார், அண்ணாமலை ரெட்டியார், பாவேந்தர், கவிமணி போன்ற இக்காலக் கவிஞர்கள் கையாண்டு மிகுபுகழ் பெற்றார்கள் என்றும் விளக்கினேன். குழந்தை, இலக்கியத்திற்கு முதன் முதலாக வித்திட்டவர் தேசிய கவி பாரதியார் என்றும், அந்த விதை பாப்பாப் பாட்டு என்றும் விளக்கினேன் அவரைத் தொடர்ந்து கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வருகின்றார் என்றும், அவருடைய "மலரும் மாலையும் என்ற தொகுப்பு நூலில் மழலை மொழி' என்ற பகுதியில் காணப்பெறும் கவிதைகள் யாவும் குழந்தைகளுக்கேற்ற பாடல்கள் என்றும், அவற்றைச் சில எடுத்துக் காட்டுகள் மூலமும் விளக்கினேன். கவி மணியைத் தொடர்ந்து குழந்தை இலக்கியப் படைப்பில் பங்கு பெறுபவர் பாவேந்தர் பாரதிதாசன் என்றும், அவர்தம் பாடல்களில் சிலவற்றை எடுத்துக் காட்டியும் விளக்கினேன். இந்த மூவரும் சிறந்த கவிஞர்கள் என்று திகழ்ந்த மும்மணிகள் என்றும், இவர்கள் தமது மிக் கருணையுள்ளத்தால் குழந்தைகள் பாடல்களைப் படைத்துப் பெரும்பேறு பெற்றார்கள் என்று சுட்டி உரைத்தேன்.