பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 147 இவர்களைத் தொடர்ந்து குழந்தை இலக்கியத்திற் கென்றே தம்மை ஆட்படுத்திக் கொண்டவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா ஆவார் என்று குறிப்பிட்டு அவர் குழந்தை இலக்கிய வானில நிலையாகத் திகமும் 'துருவமீன்' என்றும் அவர் குழந்தை கட்கென வைத்து விட்டுச் சென்ற சொத்து மலரும் உள்ளம் என்ற தொகுப்பு நூல் குழந்தைக் களஞ்சியம் என்றும் சுட்டிக் காட்டியும் அதிலிருந்து சில பாடல்களை எடுத்துக் காட்டியும் வி ள க் கி ேன ன். வள்ளியப்பாவைத் தொடர்ந்து பல குழந்தைக் கவிஞர்கள் இருக்கலாம். அவர்களைப்பற்றி அடியேன் ஒரு சிறிதும் அறியாமை யால் அவர்கள் கவிதைகளை எடுத்துக்காட்ட இயல வில்லை என்றும் குறிப்பிட்டுவிட்டு, ஆனால் அடியேன் அதிகம் அறிந்தவர் வள்ளியப்பாவின் வாரிசு போல் இருந்துவரும் இளங்கு முந்தைக் கவிஞர் குழ. கதிரேசன் என்றும்அவர்தம் மழலைப் பூப்கொத்து பலவண்ணப் படங்களுடன் வெளிவந்துள்ள அழகிய நூல் ஒரு 'குழந்தைக் கருவூலம்' என்றும் குறிப்பிட்டுக் காட்டி அவற்றிலிருந்து சில பாடல்களை எடுத்துக்காட்டியும் விளக்கினேன். அடுத்து பேச்சுப் பயிற்சி குழந்தைக் கல்வியில் மிகவும் இன்றியமையாத கூறு என்றும், அதற்கேற்ற பல பாடல்களை எடுத்துக்காட்டியும் விளக்கினேன்: தொடர்ந்து குழந்தைக் கல்வி பற்றி இன்றியமையாத சில கருத்துகளை உங்கள் முன் வைத்தும், இத்துறை யில் சில மேனாட்டு அறிஞர்களின் கருத்துகளை எடுத்துக்காட்டியும் விளக்கினேன். குழ. கதிரேசன் சிறப்புமிக்க பணி சில சிறந்த பாடல்கள் சிறந்த இசைப் பாடகர்களைக் கொண்டு மூன்று ஒலிப் பேழைகளை ஆயத்தம் செய்ததும், நான்காவது பேழை ஆயத்தப் படுத்துவதுமான நிலையில் உள்ளது என்ற செய்தி களை உங்கள் முன் வைத்தேன்.