பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் - 3 இனி இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்’ என்ற தலைப்பில் பேச நினைக் கின்றேன். அதற்கு முன்னர் தமிழ் இலக்கியத்தின் தோற்றம் முதல் இன்றைய நாள்வரை தமிழ் இலக்கிய வரலாற்றுப் பின்னணியைச் சுருக்கமாகக் கூற விழை தின்றேன். இந்தப் பின்னணி இன்றைய பேச்சின் கருத்துக்கள் தெளிவாகப் புரிந்துகொள்வதற்குத் துணை செய்யும். - 1. வரலாற்றுப் பின்னணி : தமிழ் இலக்கியம் சற்றே றக் குறைய இருபத்தைந்து நூற்றாண்டுகளின் வரலாறு கொண்டது. தொடக்ககாலத்தில் தமிழகத்தில் பிற மொழியாளரின் தாக்குறவும் (influence) பிறமொழி இலக்கியத்தின் தாக்குறவும் இல்லை. இக் காரணத்தால் ஆங்காங்கு வழங்கி வந்த நாட்டுப் பாடல்களிலிருந்தே புலவர்களால் பாடல்கள் அமைக்கப்பெற்று வழங்கி வந்தன. தென்னாட்டில் மற்ற திராவிட மொழிகளின் இலக்கியங்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு தோன்றியவையாதலால் அதற்கு முற்பட்ட பன்னிரண்டு நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் ஒரு கூட்டுக் குடும்பத் தின் முதல் குழந்தைபோல் தனியாக வளர்ந்து.வரலா யிற்று. மிகப் பண்ட்ைய பாடல்களின் தொகுப்புகளாக உள்ள சங்க இலக்கிய்த்தில் (கி.மு. 500-கி.பி. 200) கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைப் பற்றிய குறிப்புகள் காணப்பெறவில்லை. வடுகர்’ என்ற சொல் திருப்பதி மலைக்கு? வடக்கேயுள்ளவர்களைப் பற்றி வழங்கியது. மேற்குக் 1. அகம்-295 2. மலையைத் திருமலை என்றும், மலையின் கீழுள்ள நகரைத் திருப்பதி' என்றும் வழங்கு வதே சரியாதும்,