பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வகையின் வளர்ச்சியும்

கடற்கரைப் பகுதியாகிய கேரளத்தில் வழங்கும் மலையாள மொழியைப்பற்றிய குறிப்பும் இல்லை. கேரளம் அப்போது சேர நாடு' என்ற திருநாமத்தால் வழங்கி வந்தது. அங்கே வாழ்ந்த மக்கள் தமிழ்ப் பாடல்களைக் கற்று வந்தனர்; புலவர்கள் தமிழ்ப் பாடல்களை இயற்றி வந்தனர். சங்க காலத்திற்கும் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் சமஸ்கிருதம் கற்ற அறிஞர்களின் தொடர்பு தமிழகத்தில் இருந்த தாகத் தெரிகின்றது. ஆனால், இந்தத்தொடர்பு சமஸ் கிருதப் புலவர்கட்கும் தமிழ்ப் புலவர்கட்கும் நகர்ப் புறங்களின் அளவில் இருந்து வந்த உறவேயாகும். ‘தெய்வம்', 'காரண க”, “ஆனை (ஆக்ஞா) முதலான சொற்கள் தமிழ் மொழியில் ஏறிய காலம் அது. சைன சமயமும் பெளத்த சமயமும் தமிழகத்தில் பரவத் தொடங்கிய பிற்கு அந்தச் சமயங்களைச் சார்ந்தவர் களில் பலர் சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி முதலிய மொழிகளைக் கற்றவர்களாக இருந்தபடியால் வட நாட்டு மொழிகளின் சொற்கள் தமிழ் மொழியில் வந்தேறத் தொடங்கின. வடமொழி இலக்கியங்களின் தாக்குறவும் மெல்ல மெல்ல ஏற்படத் தொடங்கியது. அக்காலத்தில்தான் வடசொற்கள் பல தமிழ் இலக்கியத் திலும் ஏறின. இந்நிலையில் தென்னகத்தில் இலக்கிய மொழிகளாக மதிக்கப் பெற்றிருந்தவை இரண்டே. ஒன்று தமிழ்; மற்றொன்று சமஸ்கிருதம். முன்னதைத் தென மொழி என்றும் பின்னதை வடமொழி என்றும் அக்காலத்தார் குறிப்பிட்டனர். இன்னொரு செய்தியும் ஈண்டு உளங்கொள்ளத் தக்கது. அக்காலத்தில் வடமொழியாளர் தமிழைத் 'திராவிடம் என்று சொல்லால் வழங்கினர். ஆனால் அந்தச் சொல் அக்காலத்துத் தமிழ் இலக்கியத்தில் ஆளப் பெறவில்லை. காவுக்கரசர் பெருமான் (கி. பி.