பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ό இலக்கிய வகையின் வளர்ச்சியும் பல்லவர் ஆட்சிக் காலத்தில் தமிழ், வடமொழி ஆகிய இரு மொழிகட்கும், அவற்றைச் சார்ந்த கலைகட்கும் நல்ல ஆதரவு கிடைத்து வந்தது. காஞ்சி மாநகரம் வடமொழிக் கல்விக்கு உரிய பெரிய நகரமாகத் திகழ்ந்தது. வடமொழியில் காவ்யா தர்சம் எழுதிய த ைடி முதலான பெரும்புலவர்கள் வாழ்ந்து வட மொழிக்குத் தொண்டாற்றினர். ஆகவே, தமிழகத்தில் இரு மொழிகளையும் கற்றுத் தேர்ந்த புலவர் பரம்பரை ஒன்று அக்காலத்தில் நிலவியது. அந்தப் பரம்பரை யுடன் வடமொழி மட்டுமே கற்றறிந்த புலவர்களும், தமிழ்மட்டுமே கற்ற புலவர்களும் வாழ்ந்து வந்தனர். ஆதிசங்கரருடைய அத்வைதக் கொள்கையும் இராமாநுசருடைய விசிட்டாத்வைத கொள்கையும் பரவத் தொடங்கியபோது வடமொழி கற்றவர்களின் தொகை பெருகியது. வடமொழிப் புராணங்கள் தமிழில் மொழி பெயர்க்கப் பெற்றன. இந்தநிலையில் தமிழறிவு. ஒரு புறமும் வடமொழியறிவு மற்றொரு புறமும் தனித்து இருப்பதை உணர்ந்த ஒருசிலர் ஒரு புதுமுயற்சியில் ஈடுபட்டனர். ஒருசில வடமொழி வெறியர்கள் வட மொழியை தேவ பாஷை என்று புகழ்ந்து தமிழை சேபாஷை என்று இகழ்ந்தனர். அப்படியானால் தேவாரம், திருவாசகம், நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் முதலான பக்திப் பனுவல்கட்கு இழுக்கு நேரிடும் என்று கருதி சமஸ்கிருத சொற்களையும் தமிழ்ச் சொற்க்ளை யும் கலந்த ஒரு புதுமொழி நடையைப் படைத்து அதற்கு ‘மணிப்பிரவாளம்’ என்று திருநாமமிட்டு எழுதத் தொடங்கினர். ஆழ்வார் பாசுரங்கட்கு விளக்கவுரை எழுதிய வைணவ ஆசாரியப் பெருமக்களும்,பூl:ராணம் போன்ற சைன நூல்கள் இயற்றிய சைனப் புலவர்களும் இந்த மணிப்பிரவாள நடையிலேயே எழுதத் தொடங் கினர். அதன் வாயிலாக வடமொழிக்கும் தமிழுக்கும் நெருங்கிய உறவு ஏற்படும் என்றும், வடமொழிப்