பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{} இலக்கிய வகையின் வளர்ச்சியும் விடுதலை பெறும் வரையில், பல நூற்றாண்டுகளாகத் தமிழகம் வேறு மொழிகள் பேசுவோரின் ஆட்சிகளின் கீழ் இருந்து வந்தது. இத்தனை மாறுதல்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஒரளவு இடம் பெற்றன. ஆயினும், அதன் வளர்ச்சி இடையறாமல் நடை பெற்று வரலாயிற்று. இலக்கிய அளர்ச்சி : ஒரு மொழியிலுள்ள நூல்கள் அவ்வக் காலத்திற்கேற்ப மாறுபடுகின்றன. ஒரு நூல் தோன்றுங் காலத்தில் எவை எவை நாகரிகமாகவும், அறிஞர்களின் செயல்களாகவும், வியக்கத்தக்க செய்தி களாகவும் கருதப் பெறுகின்றனவோ அவைதாம் அக் காலத்தில் தோன்றும் இலக்கியங்களிலும் பிரதிபலிக் கும். பண்டைக் காலத்தில் அகம், புறம் என்ற துறை களில் வரையறை செய்யப்பெற்று ஆயிரக்கணக்கானப் பாடல்கள் புலவர்களால் இயற்றப்பெற்றன. மனிதனின் கற்பனைக்கு விரிந்து கொடுக்கவல்ல அகத்துறைப் பாடல்கள் அளவின்றி எழுந்தன. இவை பெரும் பாலும் நாடக வழக்காக எழுந்தவை. கி. பி. ஐந்து ஆ நூற்றாண்டுகளில் பக்தி பாடல்கள் தோன்றின. அவற்றினை யடுத்துக் காப்பியங்களும், பின்னர் அவற்றினைத் தொடர்ந்து புராணங்களும் எழுந்தன. பெரும்பாலும் இவை யாவும் வடமொழியிலிருந்த புரானங்களின் மொழிபெயர்ப்பாகும். இஸ்லாமியரின் படையெடுப்பாலும் பிறவற்றாலும் தம் நாட்டில் அமைதி குன்றியிருந்த காலத்தில் பெருங் காப்பிய வளர்ச்சியில் தடை ஏற்பட்டது. இக்காலத்தில் சில்லறைப் பிரபந்தங்கள் பல எழுந்தன. தூது, உலா, காதல், மடல், கலம்பகம் போன்றவை இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். ஜரோப்பியர் வருகைக்குப் பிறகு ஆங்கில அறிவின் தொடர்பினால் இலக்கியப் படைப்பில் புதிய திருப்பம் ஏற்பட் டுள்ளது,