பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் ii. இலக்கிய வானில் தோன்றிய மறுமலர்ச்சியின் காரண மாகத் தமிழில் புதுப்புது நூல்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் காணும் இத்தகைய மைல் கற்களிலிருந்து நாம் ஒர் உண்மையை அறிகின்றோம். காலதேச வர்த்தமானங்களுக்கேற்ப மனிதனுடைய நடையுடை பாவனைகள் மாறி வரு கின்றன என்றும், அவற்றிற்கேற்ப அவனது நோக்கங் களும் விருப்பங்களும் மாறுகின்றன என்றும், அவற் றால் அவனால் இயற்றப் பெறும் நூல்களும் புதிய புதிய வடிவங்களைப் பெறுகின்றன என்றும் அறிகின் றோம். தொல்காப்பியக் குறிப்புகள் : தொல்காப்பியர் காலத் திலிருந்து எழுந்த இலக்கியவகைகளைக் காண்போம். பண்டைக் காலத்தில் தமிழறிஞர்கள் தாம் அறிந்த கருத்துகளைச் செய்யுட்களிலேயே பொதிந்து வைத்தனர். இதனை நன்கு அறிந்த தொல்காப்பியர் செய்யுட்குரிய இலக்கணத்தைத் தமது நூலில் தொகுத்து உரைக்கின்றார். இவர் செய்யுட்குரிய உறுப்புகளாக முப்பத்து நான் கைக் குறிப்பிடுகின்றார். இவற்றை மாத்திரை. எழுத்தியல் வகை முதல் மாட்டு என்னும் யாப்பிலக்கணப் பகுதியாக உள்ளவை இருபத்தாறு என்றும், தொடர்நிலைச் செய்யுட்கு (காப்பியம்) உரியனவாக உள்ளவை அம்மை, அழகு முதல் இழைபு வரை உள்ள எட்டு என்றும் வகைப்படுத்தியும் காட்டுவர், இந்த முப்பத்து நான்கு உறுப்புகளுள் பா என்பது ஒன்று. ஏனையவை இன்றைய பேச்சுத் தலைப்புக்குத் தேவை இல்லையாதலால் ப என்பதை மட்டிலும் 1. தொல். பொருள். செய்யு-நூற்பா-1