பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 17 வெண்பா வெண்பா யாப்பாவது வெண்சீரானும் இயற் சீரானும் வெண் டளையானும் செப்பலோசை யானும் அகவலடியானும் முச்சீரடியானும் வருவது. வெண்பா என்பது, வெண்ணிறம் போன்ற இயல் புடைமைபற்றி வந்தஒப்பினாகிய பெயர். இயல்பாவது, வெண்ணிறம் வேறொன்று விரவியவழிக் கேடுறுதல் போலப் பிறதளை விரவியவழி வெண்பாவின் இசை கெடுதல். நெடுவெண்பாட்டு, குறுவெண்பாட்டு, கைக்கிளை, பரிபாட்டு, அங்கதச் செய்யுள் எனச் சொல்லப்பட்டவையும் அளவொத்தமையும் எல்லாம் வெண்பா யாப்பின என்பர் தொல்காப்பியர். நெடுவெண் பாட்டே குறுவெண் பாட்டே கைக்கிளை பரிபாட் டங்கதச் செய்யுளொடு ஒத்தவை யெல்லாம் வெண்பா யாப்பின என்று நூற்பா இட்டுக் காட்டுவர். இவையெல்லாம் ஒசையால் ஒக்குமாயினும் அளவானும் தொட்ையானும் பொருளானும் இனத்தா னும் வேறுபடுத்திக் குறியிடுகின்றார் ஆசிரியர் என்பது இளம்பூரணரின் கருத்து. நான்கனை அளவென்றும், நான்கன் மிக்கவற்றை நெடில் என்றும், குறைந்த வற்றை குறள், சிந்து என்றும் வழங்குவாராகலின், இவற்றுள் பொருளானும் இனத்தானும் வேறுபடுத்தப் பெறாத வெண்பாக்கள் மூவகைப்படும். அவை நெடுவெண்பாட்டு, குறுவெண்பாட்டு, சமநிலை வெண்பாட்டு என்பன. நெடுவெண்பாட்டு : நெடுவெண் பாட்டாவது, அளவடியின் நெடியபாட்டு. அதாவது நான்கன் மிக்க அளவடிகளையுடைதாய் வரும் வெண்பாவாலாகிய 11. செய்யு-நூற்-114 (இளம்) இ-2