பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இலக்கிய வகையின் வளர்ச்சியும் பாட்டு. ஐந்தடி முதல் பன்னிரண்டடியளவும் வரும் நெடுவெண் பாட்டினைப் பிற்காலத்தார் பஃறொடை வெண்பா' என வழங்குவர். ஒரூஉத் தொடை பெற்று வரும் பஃறொடை வெண்பாவினை நேரிசை பஃறொடை வெண்பா' என்றும், ஒரூஉத் தொடையின்றி வரும் பஃறொடை வெண்பாவினை இன்னிசை பஃறொடை வெண்பா என்றும் வழங்குவதுண்டு. இவை ஒருவிகற்பத்தாலும் பல விகற்பத்தாலும் வரும். நெடு வெண்பாட்டின் பெருக்கத்திற்கு எல்லை பன்னிரண்டடி: இதன் சிற்றெல்லை ஏழடி. சேற்றுக்கால் நீலஞ் செருவென்று வேந்தன்மேல் கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி பொருகயல தோற்றம் தொழில்வடிவு தம்முள் தடுமாற்றம் வேற்றுமை யின்றியே யொத்துன மாவடர் ஆற்றுக்கா லாட்டியர் கண். (ஆற்றுக் காலாட்டி-மருதநிலப் பெண்) இது ஐந்தடியால் வந்த ஒரு விகற்பப் பஃறொடை வெண்பா ஆறடி, ஏழடிப் பஃறொடை வெண்பாக் களை யாப்பருங்கலக் காரிகையில் கண்டு கொள்க,18 தன்மகனின் பெண்ணை தனிப்பெருமைப் பேத்திதனை இன்ப அமிழ்தை இணையற்ற ஒவியத்தைத் 12. இரண்டு தீர்இடையிட்டு மோனை முதலாயின வரத்தொடுப்பது ஒரூஉத் தொடை. எ.டு. 'அம்பொற் கொடிஞ்சி நெடுந்தேர் அகற்றி" இதன் முதன்சீரிலும் நான்காம் சீரிலும் மோனை அமைந்துள்ளமை காண்க. 13. யா. கா. வெண்பாவும் அதன் னமும் (காரிகை-24) கீழ் எடுத்துக் స్రీ. (ԼԲ