பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் - 23 பாடாண் பாட்டுக் கைக்கிளை ஆகும். மேலும் கைக்கிளைப் பொருண்மை வெண்பாவாக வருதலே யன்றி, முதலிரண்டடியும் வெண் பாவாகிக் கடை யிரண்டடியும் ஆசிரியமாகி இருபாவினாலும் வரப் பெறும் என்று விதி செய்வர் ஆசிரியர். - கைக்கிளை தானே வெண்பாங்ாகி ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே!’ என்பது விதி. இவ்வாறு வருவதனை மருட்பா என வழங்குவர். இக்கருத்தினால்தான் ஆசிரியரும், மருட்பா ஏனை இருசார் அல்லது தானிது என்னும் தன்மை யின்றே17 என்று ஒதினார் என்பது ஈண்டு அறிதற்பாலது. (எ-டு) திருநுதல் வேரரும்பும் தேங்கோதை வாடும் இருநிலனும் சேவடி எய்தும்-அரிபரந்த போகிதழ் உண்கண் இமைக்கும் ஆகு மற்றிவள் அகலிடத் தணங்கே பு.வெ. கைக்கிளை-3 உரவொலி முந்நீர் உலாய்நிமிர்ந் தன்ன கரவரு காமம் கனல-இரவெதிர் முள்ளெயி றிலங்கு முகில்நகை வெள்வளை நல்கர்ள் விடுமென் உயிரே -aq•@qஎன வரும். பரிபாட்டு : பரிபாட்டாவது, பரிந்து (பல அடி களும் ஏற்று) வரும் பாட்டாகும். அஃதாவது ஒரு வெண்பாவாக வருதலின்றிப் பல உறுப்புகளோடு தொடர்ந்து ஒரு பாட்டாகி முற்றுப் பெறுவது. 1செய்யு-115 (இளம்) 17. டிை-61,(இளம்)