பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 27 முதலுறுப்பாய் மு ன் னி ற் ப து. தரவு-தருதலை யுடையது. பாட்டின் முகத்துத் தரப்பெறுவது. முகத்திற்படும் தரவினை முகம் எனவும், இடை நிற்பன வற்றை இடைநிலை எனவும், இறுதிக்கண் முரிந்து மாறும் சுரிதகத்தினை முரிநிலை எனவும் வழங்குவர் கூத்தநூலார். இது காலடி இழிபாகப் பன்னிரண்டு அடி உயர்வாகப் பெறும் என்பர் தொல்காப்பியர்.,, எருத்தம் என்றும் வழங்கப்பெறும். எருத்தம்-பிடரி. தாழிசை : தாழப்பட்ட இசையுடையதாய் அடி களாலே தரவினின்றும் தொகை குறைந்து கலிப்பாவின் இரண்டாம் உறுப்பாய் நிற்பது. இது பதினோரடி முதல் இரண்டடி காறும் இழிந்து வரப்பெறும். இதனை இடைநிலைப் பாட்டு எனவும் வழங்குவர். தனிச்சொல் : இது தனியே சொல்லப்படும் ஒரு சீராய்ப் பொருள் நிரம்பி விட்டிசைத்துப் பெரும்பாலும் சுரிதகத்தின் முன்னே நிற்பது. விட்டிசை”, கூன்', 'தனிநிலை', 'அடைநிலை" என்றும் இது வழங்கப் பெறும். விட்டிசை-ஒரோசையினின்றும் மற்றோர் ஓசை விட்டு இசைக்கப் பெறுவதற்குக் காரணமாக இருப்பது. கூன்-நேர்மையாக வந்த ஒசை சுரிதகத் தோடு பொருந்தாமல் தடைப்பட்டு வளைதற்குக் காரணமாக உள்ளது. கூன்-வளைவு. அடைநிலை என்பது, முன்னும் பின்னும் பிற உறுப்புகளை அடைந் தன்றி வாராதது. - - சுரிதகம்: தனிச்சொல்லுக்குப் பின்னே அகவற்பா, வெண்பா என்னும் இரண்டனுள் ஒன்றாய் வந்து கலிப்பாவின் இறுதி உறுப்பாய் நின்று முடிப்பது: குனி திரை நீர்ச்சுழி போல் நின்று சுரிந்திறுவது சுரிதகம். அதாவது, சுருக்கிக் கூறுவது. இஃது அடக்கியல்' 23. செய்யு-நூற்-129 (இளம்)