பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 இலக்கிய வகையின் வளர்ச்சியும் வைப்பு’, ‘வாரம்' போக்கியல்’ என்றும் வழங்கப் பெறும். அடக்கியல்-உள்ளுறுப்பின் பொருளெல்லாம் ஒரு வகையால் அடக்கிக் கூறுவது. வைப்பு-ஈற்றில் வைக்கப் பெறுவது. வாரம்-கூறிய பகுதியைப் பின்னும் பற்றிக் கூறுவது. போக்கியல்-குறித்த பொருளை மூடித்துப் போக்குதல். ஒத்தாலிசைக் கலிக்கு எ-டு கலி-16; கலி-118. இரண்டாவது வகை : இரண்டாவது வகைச் செய்யுள் தேவரைப் பராவும் பொருண்மையுடையது. தேவரைப் பராவலாகிய அது 'வண்ணக எனவும், ஒரு போகு எனவும் இருவகைப்படும். (i) வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா : இது தரவு, தாழிசை, எண், வாரம் என்று சொல்லப் பெற்ற நான்கு உறுப்பினை உடையது. "வண்ணத்துப் புகழ்தலின் வண்ணகம் எனப்படும்; என்னை? தரவினானே தெய்வத்தினை முன்னிலையாகத் தந்து நிரீஇப் பின்னர் அத்தெய்வத்தினைத் தாழிசையாலே வண்ணித்துப் புகழ்தலின் அப்பெயர் பெற்றதாகலின் ஒழிந்த உறுப்பான் வண்ணிப்பினும் சிறந்த உறுப்பு இது வென்க... அவ்வெண்ணுறுப்புத்தான் நீர்த்திரைபோல் வரவரச் சுருங்கி வருதலின் அேைபாதரங்கம் எனவும்,* ~ഞ്ഞള്ളഞ്ഞുലഞ്ഞ 24. அம்போதரங்கம்-உயர்ந்தோங்கிப் பெருவடி வாயெழுந்து வரவரச் சுருங்கிக் கரையடைந் தொடுங்கும் இயல்புடைய் நீர்த்திரை போன்று முன்னர் நாற்சீரடியாய், உயர்ந்தோங்கிப் பின்னர் முச்சீரடியாய் அதனின் சுருங்கி, அதன்பின் இருசீரடியாய் அதனினும் சுருங்கி மடிவது. அம்போ-நீரினது தரங்கம்-திரை, ஆலை, (தரங்கம்படி-ஒர் ஊர்) அசையடி, சொற்சீரடி, எண், பிரிந்திசைக் குறள் என்பன இதன் வேறு பெயர்கள். -