பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இலக்கிய வகையின் வளர்ச்சியும் எனவும், அவற்றுக்குப் பேரெல்லை கூறுமாறென்ன்ை யெனின், அறுபதிற்றடித்தெனத் தலையளவிற்கு வேறு கூறி, அவ்வளவை பற்றி அதன் செம்பாலும் (செம்பாதி யும்) அதன் வாரமும் எனப் பாகம் செய்து வந்தானா கலாற் கடையளவம் போதரங்கத்திற்குச் சிற்றெல்லை பதினைந்தாம். கடையெழுவம் போதரங்கத்திற்குச் சிற்றெல்லை பதினைந்தாகியவழிப் பேரெல்லை முப் பதின்காறும் உயருமெனவும், இடையளவிற்குச் சிற் றெல்லை முப்பதாகியவழிப் பேரெல்லை அறுபதின் காறும் உயருமெனவும், தலையளவிற்குச் சிற்றெல்லை அறுபதாகியவழி அதனையும் இவ்வாறே இரட்டிப்ப அதன் பேரெல்லை நூற்றிருபதாம் எனவும் கொள்ள வைத்தான் என்பது' என விளக்குவர் பேராசிரியர். மேற்கூறிய உறுப்புகளே பரிபாடற்கும் உறுப்பு களாமாயினும் இவை இம்முறையே வரின் அம் போதரங்க ஒருபோகாமெனவும், அறுபதடியிற் குறைந்து முறை பிறழ்ந்து வருவனவும், ஒத்து அறுபதடி யின் மிக்கு வருவனவும் பரிபாடல் எனக் கொள்ளத் தக்கனவாம் எனவும் இவற்றிடையே யடைந்த வேறுபாட்டினை விளக்குவர் இளம்பூரணர்.: இவற்றுள் அாாகம் என்பது, அறாது (இடையற்வு படாது) கடுகிச் செல்லுதல்; மாத்திரை நீண்டும் இடையறவுபட்டும் வாராது குற்றெழுத்துப் பயின்று வந்து நடைபெறுவது அராகம் என்னும் உறுப்பாகும். 2. கலிவெண்பாட்டு : ஒரு பொருளைக் குறித்துத் தொடுக்கப் பெற்ற வெள்ளடியியலால் திரியின்றி முடிவது கலிவெண்பாட்டாகும்.* செப்பலோசையிற் சிதையாது ஒரு பொருள்மேல் வெள்ளடியால் வெண்பா முடியுமாறு முடிவன கலிவெண்பா என்னும் T32செய்யு நூற் 146இன் உரை 33. டிை நூற். 147 (இளம்)