பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 35

    காமர் கடும்புனல' (கலி-36) என்ற குறிஞ்சிக்கலி இவண் குறிப்பிட்ட கொச்சகக்கலிக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும்.
      ஒத்தாழிசைக் கலிக்குத் தாழிசையாகிய உறுப்புகள் மிக்கு வந்தாற்போலக் கொச்சகக் கலிக்கும் வெண்பா வாகிய உறுப்பு மிக்கு வரும் என்று கொள்க.
    இனி, ஈண்டோதப் பெற்ற உறுப்புகள் குறைந்தும் மயங்கியும் மிக்கும் வரப்பெறும். அத்தகைய பாடல் களைக் கலித் தொகையுள் கண்டு கொள்ளலாம்.
      தரவு மட்டிலும் உறுப்பாகக் கொண்ட தரவுக் கொச்சகக் கலிப்பாக்கள் ஆழ்வார் பாசுரங்களில் ஏராளமாக உள்ளன. (எ-டு):

திருப்பாவை முழுதும் வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர்விகற்பக் கொச்சகக் கலிப்பாவால் நடை பெறுபவை. (எ-டு) நாச்சியார் திருமொழியில்,

      எழிலுடைய அம்மனைமீர் எனனரங்கத்தின்னமுதர் குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில் எழுகமலப் பூவழகர்! எம்மானார் என்னுடைய கழல்வளையைத் தாமும் கழல் வளையே

யாக்கினரே என்ற பாசுரம் (11:2) தரவுக் கொச்சகக் கலிப்பா. இங்ங்னமே,

   செல்வத்து (4); என்ற பெருமாள் திருமொழியும் (குலசேகராழ்வார் அருளிய திருவேங்கட மலை பற்றியது), தருதுயரம் தடாய்ேல் (5) என்ற திருவித்துவக் கோடுபற்றிய பதிகமும் மன்னு புகழ்க் கெளசலை தன் (8) என்ற தாலாட்டுத் திருமொழியும்.