பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இலக்கிய வகையின் வளர்ச்சியும் படிப்பவர் பாட்டை யாத்தவரின் உணர்ச்சியை உண்டாக்குதல் வேண்டும். அங்ங்னமே உண்டாக்கு வதற்கு மேற்கொள்ளப்பெறும் முயற்சி நெறியோடு அமைந்தால் விரும்பிய பலன் கிடைக்கும்.

        இராமாய ணம் பாரதம், பெரிய புராணம் போன்ற காவியங் களைத் தலைமுறைத் தலைமுறையாக படித்து ஒரே வகையான உணர்ச்சியைப் பெற்று வருவதை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். -

பாட்டை வாய்விட்டு உரக்கப் படிக்கும் பொழுது பாட்டிலுள்ள ஒலிகள் இயங்குகின்றன. அந்த இயக் கத்தில் ஏற்பட்ட ஒழுங்கே ஒலிநயம் எனப்படுவது; வண்ணம் என்பதும் சந்தம் என்பதும் அதுதான், "இழு மென் மொழியால் விழுமியது நுவலல்’88 என்று தொல் காப்பியர் கூறுவதும் இதுவேயாகும். இழுமென்’ என்பது ஒசையளவில் நின்று பொருளுணர்த்தும் ஒர் ஒலிக்குறிப்புச் சொல் (Onomatopoetic word), போலா கும். இவ்வழகிய ஒலிக்குறிப்பு கவிதைக்கு இன்றி யமையாது வேண்டப் பெறும் ஒர் உறுப்பாகும். ஒலி களுக்கு மூன்று தன்மைகள் உண்டு. ஒன்று: ஒலியின் கால அளவு; அதனால் அமையும் நீட்டம் குறுக்கம் வேறுபாடு. இரண்டு; ஒலியின் தன்மை; வன்மையாக வும் மென்மையாகவும் ஒலிக்கும் வேறுபாடு. மூன்று; ஒலிக்கும் முறை; எடுத்தும் படுத்தும், நலிந்தும் ஒலிக் கும் பொழுது உண்டாகும் அழுத்த வேறுபாடு. இந்த மூன்று கூறுகளும் பல்வேறு அளவிலும் வகையிலும் சேர்ந்து உண்டாகும் ஒலிவி கற்பங்களையே நாம் ஒலி நயம் என்கின்றோம். இசைக் கலையில் இஃது அமை யும் நிலை வேறு; பாட்டுக்கலையில் இது பயன்படும் நிலை வேறு. முன்னதில் அஃது அடிப்படையாக

                     38.               தொல், செய்யு. நூற்.28.