பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 2

        இலக்கிய வகையின் வளர்ச்சியும்

வளைந்து அமைகின்றது. அப்படி அமைவதால் அதைப் பார்ப்போரிடம் ஒரு கவர்ச்சியை உண்பதற் கும் ஒர் ஆசையைத் துண்டுகின்றது. உண்னும் போது தனிச்சுவையையும் நல்குகின்றது. முருக்கு” (தேன்குழல்) என்ற பண்டத்தை நோக்குவோம். மதுரைக்கு இருப்பூர்தியில் பயணம் செய்வோர் 'மனப்பாறை முருக்கை அறிவார்கள். மரை வடிவ மான கைச்சுற்று வகை, முள்முருக்கு வகை, முள்ளில்லா வகை-இவையெல்லாம் நாவிற்கு ஒருவித உறுத்தலை நல்கி சுவை வேறுபாட்டினை நல்குவதை அநுபவத்தால் அறியலாம். இரயில் கட்டம் என்ற ஒரு வகையை அறிந்திருப்பீர்கள். சித்திரக்கவியைப் போன்ற சிக்கலான அமைப்பு. தின்பதற்கு ஒரு தனிச் சுவையைத் தருகின்றதல்லவா? இங்ங்னமே பல்வேறு வித யாப்புவகைளும் கவிதைகட்கு விசித்திரமான சுவைகளை நல்குவதைக் கவிதைகளைச் சுவைப்போர் நன்கு அறிவார்கள். சுவைகள் : கவிதைகளைக் கணிவித்துப் படிப் போருக்கு இன்பதை அளிப்பது அதில் பொதிந்துள்ள உணர்ச்சி. அந்த உணர்ச்சியால் உள்ளம் பூரிக்கும் பொழுது பொங்கி வரும் இன்பத்தைத்தான் தமிழ் இலக்கண நூலார் மெய்ப்பாடு’ என்ற சொல்லால் குறித்தனர்; வடமொழியாளர் இதனை ரஸம் என்று வழங்குவர். மெய்ப்பாடு பற்றிய செய்திகளைத் தொல் காப்பியப் பொருளதிகாரத்திலுள்ள மெய்பாட்டியலில்’ காணலாம். வடமொழியில் சுவை இலக்கணம் வளர்ந்த அளவிற்குத் தமிழில் அது வளர வில்லை. ஆனால் அணி இலக்கணத்தை மிகவும் வளர்த்தும் விட்டனர். மெய்பாட்டியலில் குறிப்பிடப் பெறும் மெய்ப்பாடுகள் வ ட நூ லி ல் காணப்பெறும் ரஸ்ம்', 'பாவம்' (பாவனை) என்னும் இருவகையுள் அடங்கும். தமிழில் இவற்றை முறையே சுவை” என்றும் குறிப்பு’ என்றும்