பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும்?

வேகத்தையும் புதிய பொருள்களையும் பெறுகின்றன. 'போய் விட்டான்' என்று சொல்லுவதற்குப்பதிலாகப் போயே போனான்' என்று சொல்லும்பொழுது அந்தச் சொற்றொடரில் எவ்வளவு வலுவும் பொருள் வளமும் அமைந்து கிடக்கின்றன! கவிஞன் தான் படைக்கும் கவிதையில் இதனைத்தான் செய்கின்றான். சொற்களின் மூச்சை அறிந்து அவற்றைக் கையாளு கின்றான். இராமன் முதலியோரைக் கானகத்தில் விட்டு வந்த சுமிந்திரனை நோக்கி நம்பி சேயனோ?” அணியனோ? என்று தயரதன் வினவியபோது சுமந்திரன், - வேயுயர் கானில் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினன் என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான்' என்று கூறுகின்றான். போயே போனான்’ என்ற தொடரில் இருப்பதைவிடப் பன்மடங்கு வேகத்தை இப்பாடலில் உணர முடிகின்றது. பழகிப் பழகி உருவழிந்து மெருகேறிப் போன சொற்களும் கவிதை யில் ஏறும் போது நம்மையே ஏமாற்றிப் புத்தம் புதியன வாகத் தோன்றுகின்றன. யாப்பீன் வளர்ச்சி. பழைய பாக்களாகிய வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவற்றுள் கலிப்பா ஒசை நயம் மிக்கது. ஒரு காலத்தில் கலிப் பாட்டும் பரிபாடலும் மிகுந்த செல்வாக்குடன் இருந்தன என்பதை, நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்

                                        42. கம்பரா. இதிெ தை லமாட். செய. 60