பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 59 இது நெடிலடி நான் காய் வந்த கலித்துறை. ஆழ்வார் அருளிச் செயல்களில் ஏராளமான பாசுரங்கள் கலி நிலைத்துறையால் அமைந்தவை. யாப்பருங் கலக்காரிகையில் இடம் பெறாமல், பிற் காலத்தால் வளர்ச்சி பெற்ற இரண்டு கலிப்பா இனங் களையும் காட்டுவேன். 3. கட்டளைக் கலித்துறை : ஐஞ்சீரடி நான்காய், ஒவ்வோர் அடியிலும் முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாமல் இருக்க, இறுதிச்சீர்கூவிளங்காய், கருவிளங் காய் என்பனவற்றுள் ஒன்றாகப் பெற்று, முதற்சீரின் முதலசை நேர் ஆயின் ஓரடிக்கு எழுத்துப் பதினாறும், நிரையசையாயின் பதினேழும் உடைத்தாய், ஏகாரத் தான் முடிவது கட்டளைக் கலித்துறையாகும். இஃதும் எழுத்தளவைப் பெறுதலாற் போந்த பெயர். கோவைக் கலித்துறை, திலகக் கலித்துறை என்பன இதன் வேறு பெயர்கள். இது தொல்காப்பியத்தில் கூறப்பெறும் யாப்பிலக்கணப்படி ஐஞ்சீர் நான்கடியான் வந்த தரவு கொச்சகம் எனப்படும். (sr-G) : அற்றாரைத் தாங்கிய ஐவேல் அசதி அணிவரைமேல் முற்றா முகிழ்முலை யெவ்வாறு சென்றனள் முத்தமிழ்நூல் கற்றார் பிரிவும்கல் லாதார் இணக்கமும் கைப்பொருள் ஒன்று. அற்றார் இளமையும் போலக் கொதிக்கும் அஞ்சுரமே. என்பது அசதிக் கோவையிலுள்ள ஓர் அருமையான பாடல் இதற்கு எடுத்துக்காட்ட்ாக அமைகின்றது. அப்பர் தேவாரத்தில் (நான்காம் திருமுறை) 80 முதல்