பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 63 இது நாற்சீரடியால் வந்தமையால் கலிவிருத்தம் ஆயிற்று. கண்டுகொண்டு என்கண் இணை ஆரக் களித்து பண்டை வினையாயின பற்றோடு அறுத்து தொண்டர்க்கு அழுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன். அண்டத்து அமரர் பெருமான் அடியேனே' இது நாற்சீரடியால் வந்தமையால் கலிவிருத்தமாகும் ஆழ்வார் அருளிச் செயல்களில் ஏராளமான பதிகங்கள் கலிவிருத்தத்தால் அமைந்தவையாகும். வஞ்சிப்பா இனம் 1. இரு சீரடி நான்காய் மூன்று செய்யுள் ஒரு பொருள்மேல் அடுக்கி வருவன வஞ்சித்தாழிசையாம். மடப்பிடியை மதவேழம் தடக்கையான் வெயில்மறைக் கும் இடைச்சுரம் இறந்தார்க்கே நடக்குமென் மனனேகாண் பேடையை இரும்போத்துத் தோகையான் வெயில் மறைக்கும் காடகம் இறந்தார்க்கே ஒடுமென் மனனேகாண் இரும்பிடியை இகல்வேழம் பெருங்கையான் வெயில்மறைக்கும் அருஞ்சுரம் இறந்தார்க்கே - விரும்புமென் மனனேகாண் இவை இருசீரடி நான்காய் ஒருபொருள்மேல் மூன்ற டுக்கி அடிமறியாக வந்த வஞ்சித்தாழிசை. 18. திருவாய் 9.4 9